கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம்: கொடூரத்தின் உச்சம் -கனிமொழி வேதனை

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என திமுக ராஜயசபா எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2018, 09:24 PM IST
கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம்: கொடூரத்தின் உச்சம் -கனிமொழி வேதனை title=

கர்ப்பிணி பெண்ணுக்கு HIV பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என திமுக ராஜயசபா எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.

அதில் கூறியாதவது:-

சிவகாசியில் அரசு மருத்துவமனையில் பெறப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

எச்ஐவி குறித்து இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னும், சுகாதாரத் துறை ஊழியர்களின் கவனக்குறைவால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண், ஒரு மாதத்தில் குழந்தை பெற உள்ளார்.

இந்த வைரஸ் அக்குழந்தைக்கு பரவாமல் தடுப்பதற்கும், அப்பெண்ணின் நலனை பாதுகாப்பதற்கும் அரசு உயரிய சிகிச்சை வழங்குவதோடு, உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்தது போதுமானதல்ல. உடனடியாக அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். அதை பரிசோதிக்காமல் ரத்த வங்கி ஊழியர்கள் ரத்தம் எடுத்து சேமித்து வைத்துள்ளனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைபெற்று வந்த நிலையில், ரத்தத்தில் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ரத்தம் ஏற்றும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனை சென்ற அந்த பெண்ணுக்கு ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த அரசு மருத்துவர்கள் அவரை அழைத்து ரத்தப் பரிசோதனை செய்த போது அவருக்கு HIV இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த ரத்தம் எங்கிருந்து வந்தது என்று விசாரித்ததில், சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ரத்த தானம் செய்துள்ளார் என தெரியவந்தது. ஆனால் இதற்கு முன்பே ரத்த தானம் செய்த ரமேஷ் வெளிநாடு செல்வதற்காக மதுரையில் ரத்த பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது அவருக்கு HIV பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனே தான் ரத்த தானம் செய்த சிவகாசி அரசு மருத்துவமனை தனக்கு HIV இருப்பதாகவும், அந்த ரத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் சிவகாசி அரசு மருத்துவமனையிலிருந்து சாத்தூர் மருத்துவமனைக்கு HIV பாதித்த ரத்தம் சென்றுள்ளது. அந்த ரத்தம் தான் 8 மாத கர்ப்பிணி பெண் செலுத்தி உள்ளனர். இது முழுக்க முழுக்க மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தனி அறையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறோம். அவர்களுக்கு இந்த சிகிச்சையில் நம்பிக்கை இல்லையென்றால், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படும். எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Trending News