வைகோ எங்களை ஏமாற்றி விட்டார் என கூறிய முன்னாள் மதிமுக நிர்வாகிக்கு பதிலடி

வைகோ தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறிய மதிமுக முன்னாள் நிர்வாகி துரைசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால் வைகோ குறித்து பேச அருகதையற்றவர் என தற்போதைய மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் பேட்டியளித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 6, 2024, 04:18 PM IST
  • வைகோ எங்களை ஏமாற்றிவிட்டார்
  • மதிமுக முன்னாள் நிர்வாகி துரைசாமி ஆதங்கம்
  • காரசாரமாக பதிலடி கொடுத்த மதிமுக அவைத்தலைவர்
வைகோ எங்களை ஏமாற்றி விட்டார் என கூறிய முன்னாள் மதிமுக நிர்வாகிக்கு பதிலடி title=

ம.தி.மு.க கட்சி துவங்கபட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 31-வது ஆண்டு  துவக்கவிழா கொண்டாடப்படுகறது. இதன் ஒருபகுதியாக இன்று 
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலையில் கட்சி கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து ம.தி.மு.க. அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது: தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தது அவற்றில் பல கானாமல் போனது. ஆனால் ம.தி.மு.க. 31 ஆண்டுகளாக வீறுநடை போட்டு வருகிறது.

மேலும் படிக்க | நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட் லிங்க் இதோ

எங்களது தலைவர்  பணம், பதவி, ஆசை என அனைத்தையும் துறந்தவர் வைகோ. அவர் காமராஜருக்கு மணி மண்டபம் கட்ட குரல் கொடுத்தார். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று அரசு கூறியது. மகாத்மா காந்திக்கு எவ்வாறு இடம் கிடைத்ததோ, அதே அடிப்படையில் காமராஜருக்கும் சிலை அமைத்து தாருங்கள் என கேட்டு பெற்றவர் வைகோ. தமிழினம் வாழ வைகோ பாடுபடுகிறார், அவரது பின்னால் நாங்கள் நிற்கின்றோம் என்றார். மேலும் 
முன்னாள் மதிமுக அவைத்தலைவர்  துரைசாமி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்  வைகோ அணி‌ மாறிவிட்டதாக கூறியுள்ளார். எல்லா கட்சிகளும் ஒரே நிலைபாட்டில் இருப்பது இல்லை. 

எங்கள் கொள்கையில் சமரசம் செய்தது இல்லை. தமிழ் இனத்துக்காக எப்போதும் பாடுபடுவோம். கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் எங்களுக்கு தீப்பெட்டி சின்னம் கிடைத்ததால், அதில் போட்டியிட்டோம். துரைசாமிக்கு எங்களை பற்றி பேச அருகதை இல்லை. மதிமுக பற்றி பேச எந்த தகுதியும் இல்லை, தலைமை பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார். 

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவர் கட்சி பற்றி எந்த கருத்தும் பேசக்கூடாது. மதம், இனம் ரீதியாக மக்களை பிரிவினையை உண்டாக்கும் பா.ஜனதா ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ அதிக‌வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அவர் கூறினார். 

மேலும் படிக்க | மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்! நெறிமுறைகள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News