நாடாளுமன்ற தேர்தலில் திருடன், கொள்ளைக்காரன் ஓட்டு பிச்சை கேட்டு வருவார்கள் -எச்சரிக்கும் உதயநிதி

Udhayanidhi Stalin News: காலில் விழுந்து தவழந்து வந்தவர் அல்ல.. உழைத்து படிபடியாக முன்னேறியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். நமது முதல்வர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் -இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 26, 2023, 04:19 PM IST
  • காலில் விழுந்து தவழந்து வந்தவர் அல்ல.. உழைத்து படிபடியாக முன்னேறியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.
  • எதை கொடுத்தாலும், வெற்றிகரமாக முடித்து கொடுப்பது இளைஞரணி தான்.
  • திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை அனைவரிடமும் எடுத்து சொல்ல வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் திருடன், கொள்ளைக்காரன் ஓட்டு பிச்சை கேட்டு வருவார்கள் -எச்சரிக்கும் உதயநிதி title=

தமிழ்நாடு செய்திகள்: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் திமுக ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர், தமிழக அரசின் சாதனைகள், அதிமுக, பாஜக நாடகம், முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டங்கள் குறித்து பேசினார்.

இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி இரண்டாவது மாநாட்டிற்கு இளைஞர்களை சந்தித்து மாநாட்டை வெற்றி பெற அழைப்பு விடுக்க வந்துள்ளேன். இந்த எழுச்சியோடு சேலம் மாநாட்டை வெற்றி பெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கலைஞர் நூற்றாண்டில் நடைபெறும் மாநாடு என்பதால், இது மிகப்பெரிய சிறப்பானதாக அமையும். 

தருமபுரி மாவட்டம் என்பது சாதாரண மாவட்டம் இல்லை. மற்றவர்களுக்கு முன்னுதரணமாக இருப்பது. இந்த மாவட்டத்தில் தான் 1965 கலைஞர் இந்தி எதிர்ப்பு  போராட்டத்தில் ஈடுப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அப்பொழுது கலைஞரை பார்க்க பேரறிஞர் அண்ணா சென்றார். அப்போழுது அண்ணாவிடம் கலைஞர் கேட்டது குடும்பத்தை பற்றி கேட்கவில்லை. தருமபுரி எப்படி இருக்கிறது. தருமபுரி இடைத்தேர்தல் எப்படி இருக்கு என்று கேட்டறிந்துள்ளார். 

மேலும் படிக்க - அதிமுக - பாஜக கூட்டணி முறிவு... அண்ணாமலையின் முதல் ரியாக்சன் இதுதான்!

கடந்த நாடளுமன்ற  தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று, இந்த முறை மாபெறும் வெற்றி பெற வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோட்டை விட்ட மாதிரி, கோட்டை விடக்கூடாது.

இளைஞரணி சேர்ந்தவர்கள் தான் சிறந்த செயல்வீரர்கள். உழைத்தால் யாராக இருந்தாலும் முன்னேறலாம் என்பதற்கு இளைஞரணி தான் சாட்சி‌. அதற்கு சிறந்த உதாரணம் முதலமைச்சர் தான். கலைஞரே சொல்லியிருக்கிறார். உழைப்பு என்றால், ஸ்டாலின் என்று..

முதலமைச்சர் படிப்படியாக உழைத்து, முதலமைச்சராக வந்தவர். யாருடைய காலிலும் விழுந்து முதலமைச்சராகவில்லை. இளைஞரணியில் நன்றாக உழைத்தவர்களுக்கு பொறுப்பு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உழைப்பவர்களை தேடி தேடி பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

திமுகவில் எத்தனையோ அணிகள் இருக்கிறது. எதை கொடுத்தாலும், வெற்றிகரமாக முடித்து கொடுப்பது இளைஞரணி தான். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞரணிக்கு மூன்று பணிகள் கொடுக்கப்பட்டது. அதனை செய்து முடித்து வருகிறோம்.

சேலம் மாநாட்டில், திமுக  இயக்கத்தின் கொள்கைகள், சாதனைகளை சொல்லப்போகிறோம். ஆனால் மதுரையில் நடைபெற்ற மாநாடு குறித்து நான் சொல்ல தேவையில்லை. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், ஏன் கலந்து கொண்டோம் என்றும், நடத்தியவர்களுக்கும் ஏன் நடத்தினோம் என்றும் தெரியவில்லை. இதில் கொள்கை பற்றி பேசவில்லை. அடுத்த நாள் ஊடகங்களில் விவதாம் அங்கு பேசப்பட்ட கொள்கைகள் குறித்து அல்ல புளிசாதம் குறித்து தான். சேலத்தில் நடைபெறும் திமுகு இளைஞரணி மாநாட்டிற்கு குடும்பத்துடன் அனைவரும் வர வேண்டும். நம் கட்சி வரலாறு, கொள்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை, இளைஞர்கள் மனதில் வைத்துக் கொண்டு, உறவினர்கள், கிராமத்தில் உள்ளவர்கள் என அமைத்து தரப்பிடமும் எடுத்து சொல்ல வேண்டும். 

மேலும் படிக்க - முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி: இன்றும்... என்றும் இல்லை... இபிஎஸ் அதிரடி முடிவு!

முதலமைஞ்சராக தலைவர் போட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை வழங்கியுள்ளார். அதற்கும் மேலாக அரசுப் பள்ளிகளல் செயல்படுத்தப்பட்டு உள்ள காலை உணவுத் திட்டம் எனக்கு மிகவும் பிடித்த திட்டம். இதனால்  மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கடந்த 15-ம் தேதி மகளிர் உரிமைத் திட்டம். இதனால் மகளிர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தெரியாமல் அதிமுகவும், பாஜகவும் குழும்பி போய், மக்களை குழப்பி விட்டுள்ளனர். இன்று புதுப் பிரச்சிணை. காலையில் ஒருவர் கூட்டணி இல்லை என்கிறார். மாலையில் கூட்டணி என்கிறார். நான்கு முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள். அதிமுக என்றால் இது அமித்ஷா திமுக தான். இவர் இருவரும் நாடகம் ஆடுகிறார்கள். தேர்தலின் போது இணைந்து வருவார்கள். ஓட்டு பிச்சை எடுக்க. ஒருவர் திருடன், ஒருவர் கொள்ளைக்காரன்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்று மோடி பேசுகிறார். ஆமா கலைஞரின் குடும்பம் தான், திமுக என்கிற குடும்பம் தான் பிழைக்கிறது. ஆனால் உங்காளால் அதானி குடும்பம் தான் பிழைத்திருக்கிறது‌. அதானியும், மோடியும் ஒன்றாக விமானத்தில் சென்றார். இதை புகைப்படத்துடன் ராகுல் காந்தி விளக்க வேண்டும் என கேட்டார். ஆனால் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் சென்று  வெற்றி பெற்றார். இதுதான் இந்தி கூட்டணிக்கான வெற்றி.

வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய கூட்டம் கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். நமது முதல்வர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் என இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்க - நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி -ஜெகன்மூர்த்தி உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News