TN Lok Sabha Elections 2024 Polling Updates : மக்களவை தேர்தல் 2024 - தமிழ்நாட்டில் 6 மணியுடன் நிறைவடைந்தது வாக்குப்பதிவு!

Tamil Nadu Lok Sabha Elections 2024 Polling Update News in Tamil : தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. சென்னையின் மூன்று தொகுதிகளிலும் குறைவாகவே வாக்குப் பதிவாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 19, 2024, 08:41 PM IST
    18வது மக்களவை தேர்தலில் இன்று நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்த தகவல்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Live Blog

Tamil Nadu Lok Sabha Elections 2024 Polling Update News in Tamil: 18வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு (Phase 1) இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளிலும், கன்னியாகுமரியில் விளவங்கோடு தொகுதியிலும் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA Alliance), எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி (INDIA Alliance) மற்றும் அதிமுகவின் கூட்டணி என மும்முனை போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், வாக்காளர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி வாக்குச் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஏப். 19ஆம் தேதியான இன்று பொது விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை இயங்காது. தனியார் நிறுவனங்களும் சில விடுமுறைவிடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தங்களின் வாக்கைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினர்.

19 April, 2024

  • 19:01 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : தமிழ்நாட்டில் இரவு 7 மணிவரை 72.09% வாக்குகள் பதிவு

    தமிழ்நாட்டில் இரவு 7 மணிவரை 72.09% வாக்குகள் பதிவு நடைபெற்றிருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். மாநிலத்திலேயே அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

  • 18:31 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்

    மத்திய சென்னை தொகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

  • 18:30 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம்

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றி உறுதி. காங்கிரஸ் , திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் களத்தில் இல்லை என பாஜக வேட்பாளர் நந்தினி தெரிவித்துள்ளார். வாக்குபதிவு சதவீதம் குறைந்தாலும் பாஜகவின் வாக்குகள் அதிக அளவில் பதிவாகி உள்ளது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் களத்தில் இல்லை. பாஜக களத்தில் சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ஆகவே வெற்றி பாஜகவுக்கே. நான் முன்பு உங்களிடம் கூறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நந்தினி தெரிவித்தார்.

  • 18:05 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைப்பு

    தமிழ்நாடு முழுவதும் வாக்குகள் பதிவான பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வருகிறது.

  • 18:01 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவு

    தமிழ்நாட்டில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

  • 17:41 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : தமிழ்நாட்டில் 5 மணி நிலவரம்

    தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 62.02 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

     

  • 17:39 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்

    மாலை 5 மணி வரை சிதம்பரம் 68.01 சதவிகிதம் பதிவாகியுள்ளது. அரக்கோணம் 64.43 சதவிகிதம், கள்ளக்குறிச்சி 72 புள்ளி 43 சதவிகிதம், சேலம் 71.83% வாக்கு சதவீதம், ஈரோடு 65.13 சதவீதம், திருச்சி 59.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

  • 17:30 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : கோவை, பொள்ளாச்சி வாக்கு பதிவு 5 மணி நிலவரம்

    மாலை 5 மணி நிலவரப்படி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 57.53% வாக்குகளும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 64.99% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

  • 17:30 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : கோவை, பொள்ளாச்சி வாக்கு பதிவு 5 மணி நிலவரம்

    மாலை 5 மணி நிலவரப்படி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 57.53% வாக்குகளும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 64.99% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

  • 17:29 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : கள்ளக்குறிச்சி 72.43 % வாக்குகள் பதிவு

    கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 72.43 % வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிப்பு!

  • 17:28 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : திருச்சியில் 5 மணி நிலவரப்படி 58.52% வாக்குகள் பதிவு

    திருச்சி மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 58.52% வாக்குகள் பதிவு

  • 16:58 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : 5 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு

    சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் 50 நிமிடம் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை வாக்களிக்க வராதவர்களை வாக்களிக்க வைப்பதற்காக அரசியல் கட்சியினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

  • 16:43 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : திருச்சி சிவா குற்றச்சாட்டு

    தமிழகத்தில் அதிகாரிகள் அமைச்சர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர் என திருச்சியில் ஓபிசி பிரிவு மாநில நிர்வாகி சூர்யா சிவா குற்றச்சாட்டு

  • 16:39 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : கடந்த தேர்தல்களில் 3 மணி நிலவரம்!

    2009 நாடாளுமன்றம் - 51 %
    2011 சட்டமன்றம் - 59 %
    2014 நாடாளுமன்றம் - 60.52 %
    2016 சட்டமன்றம் - 63.7 %
    2019 நாடாளுமன்றம் - 52.02 %
    2021 சட்டமன்றம் - 53.35 %
    2024 நாடாளுமன்றம் - 51.4 %

  • 16:38 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : நடிகர் சூரி வேதனை

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் விடுபடத்தால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனை

     

  • 16:34 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : நடிகை குஷ்பூ டிவிட்டர் பதிவால் குழப்பம்

    லோக்சபா தேர்தலில் வாக்களித்த பிறகு #Vote4INDIA என்ற ஹேஸ்டேக் குஷ்பூ தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் போட்டதால் குழப்பம் ஏற்பட்டது. உடனே, அந்த பதிவை எடிட் செய்துவிட்டார்.

  • 15:43 PM

    TN Lok Sabha Elections 2024 Polling Live Updates : 3 மணி நிலவரம் - தொகுதிவாரியாக...

    Lok Sabha Election 2024 Vote Percentage Till 3 PM

  • 15:41 PM

    Lok Sabha Elections 2024 Polling Live Updates : 3 மணி நிலவரம் இதோ!

    தமிழ்நாட்டில் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகி உள்ளது. 

     

  • 15:22 PM

    Lok Sabha Elections 2024 Polling Live Updates : நடிகர் விஜய் ட்வீட்

  • 14:51 PM

    Lok Sabha Elections 2024 Polling Live: விஜய் வைத்த கோரிக்கை

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில்,"நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.​

  • 14:49 PM

    Lok Sabha Elections 2024 Polling Live Updates : அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும்!

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி தப்பு கணக்கு போட்ட அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் என சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் சசிகலா பேட்டியளித்தார்.

  • 14:40 PM

    Lok Sabha Elections 2024 Polling Live: அதிகாரிகளுடன் எல்.முருகன் வாக்குவாதம்

    நீலகிரி தொகுதிக்குட்பட்ட அன்னூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், வாக்களிக்க வந்த முதாட்டி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க விரும்பியதாகவும், ஆனால் தேர்தல் அதிகாரி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கூறியதாகவும் தெரிவித்து நீலகிரி பாஜக வேட்பாளர் எல். முருகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அந்த மூதாட்டியும் இருக்கிறார். 

  • 13:59 PM

    Lok Sabha Elections 2024 Polling Live Updates : மதியம் 1 நிலவரம் - தொகுதிவாரியாக...

    தமிழகம் முழுவதும் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 44.08 % வாக்கு பதிவாகியிருக்கிறது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 35.14 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது.

    Lok Sabha Election 2024 Vote Percentage Till 1 PM

  • 13:55 PM

    Lok Sabha Elections 2024 Polling Live: நெல்லையில் தேர்தல் புறக்கணிப்பு

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருத்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்து தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இதுவரை 50 பேர் மட்டுமே அந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தி உள்ளனர். 

  • 13:07 PM

    Lok Sabha Elections 2024 Polling Live: அரக்கோணத்தில் ஒருவர் உயிரிழப்பு

    சேலத்தில் இரண்டு மூத்த குடிமக்கள் உயிரிழந்த நிலையில், அரக்கோணம் அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் நின்றபோது மயங்கிவிழுந்து உயிரிழந்தார். 

  • 12:25 PM

    Lok Sabha Elections 2024 Polling Live: விஜயின் இடது கையில் 'பேண்டேஜ்'

    சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாக்களித்தார். வெளிநாட்டில் இருந்து இன்று காலை வந்தடைந்த அவர், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அவரின் வருகையால் ரசிகர்கள் வாக்குச்சாவடியில் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. அவரது இடது கையில் பேண்டேஜ் போட்ட நிலையில், வாக்களித்தார் என கூறப்படுகிறது. 

  • 12:18 PM

    Lok Sabha Elections 2024 Polling Live: வாக்களிக்க புறப்பட்ட விஜய்

    சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். தென்சென்னை தொகுதிக்கு உட்பட நீலாங்கரை வாக்குச்சாவடியில் 

  • 12:14 PM

    Lok Sabha Elections 2024 Polling Live: மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு

    மணிப்பூர் மாநிலத்தில் இன்று மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், அங்கு துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இம்பால் பள்ளத்தாக்கில் நடைபெறும் வன்முறையால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது. 

  • 12:03 PM

    Lok Sabha Elections 2024 Polling LIVE Updates : 11 மணி நிலவரம் - தொகுதிவாரியான விவரம்

    Lok Sabha Election 2024 Vote Percentage Till 11 AM

  • 11:41 AM

    Lok Sabha Elections 2024 Polling Live: 11 மணி நிலவரம்

    காலை 11 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 24.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்துள்ளனர். 

  • 11:39 AM

    Lok Sabha Elections 2024 Polling Live: சென்னை நிலவரம்

    சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி, 15 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது. திருச்சியில் அதிகபட்சமாக 22.77 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 27.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது வாக்கினை செலுத்தினார்.

  • 11:29 AM

    Lok Sabha Elections 2024 Polling LIVE Updates : வாக்குச்சாவடிகளில் 2 பேர் பலி

    சேலம் கெங்கவல்லி அருகே 77 வயதான மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சூரமங்கலம் பகுதியில் தனது மனைவியுடன் வாக்களிக்க வந்த பழனிசாமி (65) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

  • 11:04 AM

    Lok Sabha Elections 2024 Polling LIVE Updates : சைதாப்பேட்டையில் இயந்திர கோளாறு

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பாத்திமா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் கடந்த ஒன்றரை மணிநேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. VVPAT இயந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு வருவதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 226 வாக்குகள் இதுவரை அங்கு வாக்களித்துள்ள நிலையில், 227 வாக்கின்போது கோளாறு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அதனை சரிசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

  • 10:48 AM

    Lok Sabha Elections 2024 Polling LIVE Updates : உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார்

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா தனது வாக்கினை செலுத்தினர்.

  • 10:37 AM

    Lok Sabha Elections 2024 Polling LIVE Updates : முதல் கட்ட வாக்குப்பதிவு - 9 மணி நிலவரம்

    21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாநிலங்களின் காலை 9 மணி வரை பதிவாகியிருக்கும் வாக்குச் சதவீதம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    மேகலயாவில் 13.71%, 

    மிசோரம் 10.84%, 

    நாகலாந்து 9.66%, 

    புதுச்சேரி 8.78%, 

    ராஜஸ்தான் 10.67%, 

    ஜம்மு காஷ்மீரில் 10.43%, 

    லட்சத்தீவு 5.59%, 

    மத்திய பிரதேசம் 15%, 

    மகாராஷ்டிரா 6.98%, 

    மணிப்பூர் 10.76%,

    அந்தமான் நிக்கோபார் 8.64%, 

    அருணாச்சல பிரதேசம் 5.98%, 

    அசாம் 11.15%, 

    பீகார் 9.23%, 

    சத்தீஸ்கர் 12.02%, 

    சிக்கிம் 7.92%, 

    தமிழ்நாடு 12.55%, 

    திரிபுரா 15.21%, 

    உத்தர பிரதேசம் 12.66%, 

    உத்தரகாண்ட் 10.54%,  

  • 10:34 AM

    Lok Sabha Elections 2024 Polling Live Updates: கமல்ஹாசன், தனுஷ் வாக்களித்தார்

    நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் தனது வாக்குகளை பதிவுசெய்தார்.

    அதேபோல், நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்குகளை பதிவு செய்தார். 

  • 09:57 AM

    Lok Sabha Elections 2024 Polling LIVE : தேர்தல் புறக்கணிப்பு

    காஞ்சிபுரம் ஏகனாபுரம் வாக்குச்சாவடியில் ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை. பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

  • 09:47 AM

    Lok Sabha Election Live: பாபா ராம் தேவ், சத்குரு வாக்களித்தனர்

    உத்தரகாண்டின் ஹரித்துவாரில் பாபா ராம் தேவ் வாக்களித்தார்.

    அதேபோல், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் இன்று முட்டத்துவயல் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

  • 09:42 AM

    Lok Sabha Election Live: காலை 9 மணி நிலவரம் - முழு விவரம் இதோ

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் காலை 9 மணி வரை எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களையும் இந்த புகைப்படத்தில் தெரிந்துகொள்ளலாம். 

    Lok Sabha Election 2024 Vote Percentage Till 9 AM 

  • 09:26 AM

    Lok Sabha Election Live: காலை 9 மணி நிலவரம்

    காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 12.55% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 15.10% வாக்குகள் பதிவாகி உள்ளன. 

  • 09:16 AM

    Lok Sabha Election Live: செல்போனுடன் அனுமதிக்க மறுப்பு

    சென்னையில் பல வாக்குச்சாவடிகளில் செல்போனுடன் வாக்களிக்க வந்த வாக்காளர்களை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். எக்காரணத்திற்காகவும் செல்போன் உடன் வாக்காளர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் மக்கள் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் போதிய விழிப்புணர்வு அளிக்கவில்லை என்றும் மீண்டும் வீட்டுக்குச் சென்று மொபலை வைத்துவிட்டு வருவது சாத்தியமில்லாதது என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.   

  • 09:04 AM

    Lok Sabha Election Live: வாக்களித்த 102 வயது மூதாட்டி

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் 102 வயது மூதாட்டி சின்னம்மாள், வாக்களித்து தனது ஜனநாயக் கடமை ஆற்றினார்.

  • 08:59 AM

    Lok Sabha Election Live: சவால் விடும் அண்ணாமலை

    கரூரில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பாஜக மாநில தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை,"கோவையில் திமுகவும், அதிமுகவும் ரூ1,000 கோடிக்கு அதிகமாக செலவு செய்துள்ளனர். தமிழக போலீசார், உளவுத்துறை, திமுக, அதிமுக என்ன செய்து கொண்டிருக்கிறது என அனைவரும் பார்த்து கொண்டிருக்கின்றனர். 

    வாக்காளரில் ஒருவராவது பாஜகவினர் வாக்களிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர் என ஊடகங்கள் முன் சொல்லட்டும், அரசியலைவிட்டே விலகிவிடுகிறேன். திராவிட அரசியல் கட்சிகளுக்கு இதனை சவாலாகவே விடுக்கிறேன்" என்றார்.  

  • 08:43 AM

    Lok Sabha Election Live: RX100 பைக்கில் வாக்களிக்க வந்த புதுச்சேரி முதல்வர் 

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, யமஹா RX100 பைக்கில் வந்து லாஸ்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

  • 08:36 AM

    Lok Sabha Election Live: வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்

    தென்சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை SIET கல்லூரியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

    செய்தியாளர்களை கேட்ட கேள்விக்கு,"நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றிதான்" என பதிலளித்து சென்றார். முன்னதாக அனைவரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

  • 08:30 AM

    Lok Sabha Election Live: வாக்களிக்க முதல்வர் வருகை

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள SIT கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்தனர். 

  • 08:24 AM

    Lok Sabha Election Live: பிரபலங்கள், தலைவர்கள் வாக்களிப்பு

    சென்னை தி.நகரில் மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளர் இளையராஜா வாக்களித்தார். நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டையில் தனது வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தங்களது வாக்கினை செலுத்தினார்கள்.

  • 08:16 AM

    Lok Sabha Election Live: 8 மணி நிலவரம்

    திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் காலை 8 மணிவரை 4.5% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆரணியில் 4% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல், புதுச்சேரியில் 12% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

Trending News