அண்ணாமலை ஓர் பொய் புழுகி: அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்...!

Tamil Nadu News: அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன? பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 21, 2024, 11:15 AM IST
  • திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான தேர்தல் அறிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்
  • இந்தியா கூட்டணி வென்று இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்: அமைச்சர் மனோ தங்கராஜ்
  • தமிழ்நாட்டில் இருப்பது போன்று உரிமைத் தொகை மகளிருக்கு வழங்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்
அண்ணாமலை ஓர் பொய் புழுகி: அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்...! title=

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தந்த அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் விமான நிலைய வாயிலில் மேள, தாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். 

பின்னர் விமான நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக
சட்டமன்றத் தேர்தல் அறிக்கை போலவே நாடாளுமன்ற தேர்தல்  அறிக்கையும் உள்ளதாக அண்ணாமலை கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன? பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது. சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் சென்றவர் அல்ல அவர். அந்த நடவடிக்கையை கவனித்தவரும் அல்ல. திமுகவின் தேர்தல் அறிக்கைகள் மிக முக்கியமான தேர்தல் அறிக்கை. 

இத்தனை ஆண்டு காலம் பத்தாண்டு காலம் கேஸ், பெட்ரோல் விலை, உயர்த்தி இந்திய நாட்டிலுள்ள மக்கள் அத்தனை பேரையும் இந்துக்களையும் வஞ்சித்தது மோடி அரசு. தற்போது இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலை நேர் பாதியாக குறைப்போம் என்று சொல்லி இருக்கின்றோம். கேஸ் விலை 500 ரூபாய்க்கு கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் உள்ளது. இன்றைக்கு வழிப்பறி செய்யப்படுகின்ற இந்த டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்படும். மத்தியில் இந்தியா கூட்டணி வென்று இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். குறிப்பாக வட மாநிலங்களில் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பது போன்று உரிமைத் தொகை மகளிருக்கு வழங்கப்படும். இந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியாக அளித்துள்ளோம். இது கூட தெரியாமல் ஒருவர் கட்சி நடத்துகிறாரா? இல்லை எப்போதுமே பேசவேண்டும் என்பதற்காக பொய்யை புழுகி விட்டுக் கொண்டிருக்கிறார்களா? என்பதே எங்களுடைய கேள்வி.’ என்று கூறினார்.

மேலும் படிக்க | CSK Vs RCB மேட்ச் பார்க்க செல்பவர்களுக்கு ஸ்பெஷல் சலுகை! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு!

இதற்கிடையில், கடந்த முறை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? ‘எடப்பாடி பழனிச்சாமி பாவம், சர்வாதிகாரிகளுக்காக ஓடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று பல்வேறு கன்ஃபியூஷன். எடப்பாடி பழனிச்சாமி அரசு பத்தாண்டு காலத்தில் எவ்வளவு தவறுகளை இழைத்தார்கள். திமுக அரசு மக்கள் மத்தியில் பலமாக ஊடுருவியுள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர்  நிறைவேற்றி வருகிறார். 75% மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். இன்னும் சில திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் சில கட்சிகள் வெற்றி வாய்ப்பு வேட்பாளர்களுக்கு தடுமாறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் திமுக வெற்றி வேட்பாளர் வெற்றி கூட்டணி அமைத்து தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார். இது மகத்தான கூட்டணியாக இருக்கும். 40 என்ற மந்திரத்தை நிதர்சனத்தில் உருவாக்கும் ஒரு தேர்தலாக தான் இந்த தேர்தல் 100 சதவீதம் இருக்கும்’ என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

மேலும் படிக்க | ’அசைன்மெண்ட் கோவை’ செந்தில் பாலாஜி இடத்தை கவனிக்க செல்லும் டிஆர்பி ராஜா! ஸ்டாலின் உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News