ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருவிடைமருதூர் அருகே திமுக பிரமுகர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், மர்ம நபர்ளை போலீஸ் தேடி வருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 13, 2024, 03:28 PM IST
  • ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ சகோதரி மகன் கொலை
  • முன் விரோதமா? என காவல்துறை தீவிர விசாரணை
  • காவல்துறை மெத்தனத்தால் கொலை எனவும் புகார்
 ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை  title=

கும்பகோணம் அருகே உள்ளதிருவிடைமருதூர் தாலுக்கா பந்தநல்லூர் நெய் குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ கண்ணன் சகோதரியை திருமணம் செய்துள்ளார். இவர்களது மகன் கலைவாணன் வயது 30. திமுக பிரமுகரான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரை இயக்குவதற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை தேடிச் சென்றுள்ளனர்.

அங்கு கலைவாணன் மர்ம நபர்களால் அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த பந்தநல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து கலைவாணனை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | "சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்

சம்பவ இடத்திற்கு தடையவியல் துறையினர்மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பந்தநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன் கலைவாணன் என்பவரது வீட்டில் இருந்த வைக்க போரை கொடுத்துவிட்டு தொடரும் என சுவரில் எழுதி வைத்து சென்றிருந்தனர். அதற்கு அவர்கள் நான்கு முறை காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் முறையான விசாரணையை மேற்கொள்ளாதது இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

இதேபோன்று இந்த கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு இருந்த கலைவாணன் வீட்டுக்குள் உயிரா? பயிரா? என பேப்பரில் எழுதி மர்ம நபர்கள் போட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு? ஷாக்கிங் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News