வானிலை முன்னறிவிப்பு.... தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Apr 21, 2019, 03:50 PM IST
வானிலை முன்னறிவிப்பு.... தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! title=

தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

தமிழகம், புதுவையில் அடுத்த இரு தினங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாலும், வெப்பச்சலனத்தாலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊட்டியில் 10 சென்டி மீட்டர் மழையும், ஓசூர், வால்பாறை, ஓமலூர், மேட்டூரில் தலா 7 சென்டி மீட்டர் மழையும், குன்னூர், பரமத்தி வேலூரில் தலா 6 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News