Cyber Hackathon : ஹாக்கர்களுக்கு போட்டி வைக்கும் காவல்துறை... காத்திருக்கும் ஒரு லட்சம் ரூபாய்

குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்படும் குறைப்பாடுகளை களையும் நோக்கில், 8 தலைப்புகளின்கீழ் ஹாக்கர்களுக்கு சென்னை காவல்துறை போட்டி ஒன்றை நடத்த உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 26, 2022, 06:22 AM IST
  • இரு கட்டங்களாக இந்த போட்டி நடைபெற உள்ளது.
  • இதில், பங்குகொள்ள விரும்புவோர் நவ. 30ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
  • முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.
Cyber Hackathon : ஹாக்கர்களுக்கு போட்டி வைக்கும் காவல்துறை... காத்திருக்கும் ஒரு லட்சம் ரூபாய் title=

குற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் சிசிடிவி காட்சிகளின் பங்கு இந்த காலக்கட்டத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும் அதில் இருக்கும் சில குறைபாடுகளால் விசாரணையில் பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய  எட்டு தலைப்புகளின் கீழ் சென்னை காவல் துறை ஹாக்கர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் பரிசை பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 30 ஆயிரம், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 20 ஆயிரம் என வழங்கப்படும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களை பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி காவல்துறையினர் தடுத்தும் அதனை கண்டுபிடித்தும் வருகின்றனர்.

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பங்கு வகிப்பது சிசிடிவி காட்சிகள்தான். அவ்வாறு கிடைக்க பெறும் சிசிடிவி காட்சிகளில் பல நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக போதிய ஆதாரமில்லாமல் குற்றவாளிகள் தப்பித்து வரும் சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் படிக்க | ஜெயலலிதாவின் அந்த நிலைக்கு டிடிவிதான் காரணம் - சி.வி. சண்முகம்

இந்த குறைபாடுகளை களையும் நோக்கில் சென்னை காவல்துறை, ஹாக்கர்கள் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் எட்டு தலைப்புகளின் கீழ், தற்போது காவல்துறை சந்தித்து வரும் குறைபாடுகளுக்கு வல்லுநர்கள் தீர்வு காண வேண்டும்.

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள இந்த போட்டியில்  மூன்று பேர் கொண்ட குழுவாக பங்கு பெறலாம். போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வருகின்ற நவ.30ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதல் கட்ட போட்டி டிச. 3ஆம் தேதி தொடங்கி டிச. 6ஆம் தேதிவரை இணையதளம் வழியாக நடத்தப்படும். அதில், தகுதி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.  இரண்டாம் கட்ட போட்டி, வரும் டிச. 12ஆம் தேதி அன்று நேரடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தலைப்புகள்?

வாகனங்களில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகும்போது, அவை பல நேரங்களில் மங்கலாக தெரியும். இதனால், அதன் நம்பர் பிளேட்களை துல்லியமாக சிசிடிவி கட்சியில் இருந்து எடுத்துக் கொடுக்கும் வகையில் ஒரு போட்டி.

சிசிடிவி காட்சிகள் பதிவாகவும் குற்றவாளிகளின் முகம் தெளிவாக மாற்றிக் கொடுக்கும் வகையில் ஒரு போட்டி. இரவு நேரங்களில் அதிக வெளிச்சத்துடன் வரும் வாகனங்களால் சிசிடிவி கட்சியில் நம்பர் பிளேட்டுகள் தெளிவாக தெரிவதில்லை. இரவு நேரங்களிலும் நம்பர் பிளேட்டுகளை தெளிவாக தெரியும் வகையில் மாற்றி கொடுக்கும் ஒரு போட்டி என எட்டு தலைப்புகளின் கீழ் இந்த போட்டி நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | உதயநிதிதான் முதலமைச்சராக வேண்டும் - போர்க்கொடி தூக்கும் மருமகள்... வருத்தத்தில் ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News