கூட்டணிக்கு தவம் கிடக்கும் பாஜக... ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்!

AIADMK Alliance: இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடக்கிறது என்றும் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Mar 1, 2024, 06:56 AM IST
  • அதிமுக பலமாக இருப்பதால்தான் பாஜக நம்மை தேடுகிறது - கடம்பூர் ராஜூ
  • கடந்த முறை பாஜக மேல் இருந்த வெறுப்பில் திமுக வெற்றி பெற்றது - கடம்பூர் ராஜூ
  • அதிமுகவின் வளர்ச்சி இன்றைக்கு இமயமாக உயர்ந்துள்ளது - கடம்பூர் ராஜூ
கூட்டணிக்கு தவம் கிடக்கும் பாஜக... ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! title=

AIADMK Alliance: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் நகரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது‌. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "இன்னும் பத்து தினங்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு திமுக அரசினை எதிர்த்து ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர் என அனைவரும் போராடுகின்றனர். இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடக்கிறது. கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர்.

'பிரதமர் இதுபோல் பேசியது கிடையாது'

அதிமுக பலமாக இருப்பதால்தான் பாஜக நம்மை தேடுகிறது, திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இந்த முறை அதிமுகதான் களமிறங்குகிறது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஏறக்குறைய வேட்பாளரை பொதுச் செயலாளர் தேர்வு செய்துவிட்டார்.

மேலும் படிக்க | அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

பாஜக நம்மை தற்போது அட்டாக் பண்ணவில்லை, திமுகவை குழிதோண்டி புதைத்து விடுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார். பிரதமர் இந்த மாதிரி இறங்கி பேசினது கிடையாது. அதற்குக் ஏற்ப இங்கு ஒரு அமைச்சர் சீனா ராக்கெட் உடன் விளம்பரம் போட்டுள்ளார். குலசேகரப்பட்டினத்தில் 2,233 ஏக்கர் அளவில் இஸ்ரோவின் ராக்கெட் தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் அதிமுகதான் முழுகாரணம், நிலத்தினை கையகப்படுத்தி கொடுத்த ஆட்சி அதிமுக தான்.

டம்மி அமைச்சர்கள்

இந்த திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. கருணாநிதியின் கனவு நனவாக்க விட்டதாக கனிமொழி எம்பி கூறுகிறார். அவங்க கனவு கனவாகதான் இருக்கும். இதற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. திமுகவை பாஜக விடாது, அதிமுக ரூட் கிளியர் ஆகிவிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்தி விட்டதை மக்களிடம் தெரிவித்தால் போதும். மோடியை மக்கள் பார்ப்பார்கள். ஆனால் ஓட்டாக மாறாது.

தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் அதிகபட்சம் ஐந்து சதவீத வாக்குகள் தான் கிடைக்கும், திராவிட கட்சிகள் இல்லாமல் தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் என்றால் அது கனிமொழி எம்.பி.தான்., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இருவருமே டம்மி அமைச்சர்கள். திமுக என்றைக்கும் மரபுகளைப் பின்பற்றியதிலை.

மேலும் படிக்க | ராக்கெட் ஏவுதளத்திற்கு குரல் கொடுத்தது கருணாநிதி தான்!

அரசியல் திருப்பம் வரும்

தமிழகத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களில் டம்மி அமைச்சர்கள் இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில்தான், காரணம் கனிமொழி எம்பி வாரிசு... முதல்வர் குடும்பத்தில் இருந்து வந்தவர். திமுக வாரிசு அரசியலுக்கு இது ஒரு உதாரணம். அதே போன்றுதான் மரபுகளை மீறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகிறார். 

தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு சாதகமான அம்சம் உள்ளது. மக்கள் என்றைக்கும் விலை போக மாட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மேல் இருந்த வெறுப்பில் திமுக வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. பாஜக வளர்ந்து விட்டதாக கூறுகிறார்கள், அதை வரும் தேர்தலில் பார்ப்போம்.

அதிமுகவின் வளர்ச்சி இன்றைக்கு இமயமாக உயர்ந்துள்ளது. அத்தனை கட்சிகளும் கூட்டணிக்காக இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிமுகவை தேடி வரும் நிலை இருக்கும். ஒரு அரசியல் மாற்றம், திருப்பம் ஏற்படும் வெற்றி அதிமுகவிற்குத்தான்" என்றார்.

மேலும் படிக்க | திமுக நிர்வாகி வெட்டிக் கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்! விரைந்து சென்ற அமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News