ஷாகீன் அப்ரிடி குறித்து வக்கார் யூனிஸ் கவலை! இந்திய அணிக்கு டபுள் டமாக்கா

ஷாகீன் அப்ரிடியின் பந்துவீச்சு குறித்து வக்கார் யூனிஸ் கவலை தெரிவித்திருக்கும் நேரத்தில், இந்திய அணிக்கு இளம் வீரர் சுப்மான் கில் திரும்புகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 12, 2023, 05:22 PM IST
  • பார்ம் இல்லாமல் தவிக்கும் ஷாகீன் அப்ரிடி
  • இந்திய அணிக்கு திரும்பும் சுப்மான் கில்
  • எச்சரிக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்
ஷாகீன் அப்ரிடி குறித்து வக்கார் யூனிஸ் கவலை! இந்திய அணிக்கு டபுள் டமாக்கா  title=

உலக கோப்பை 2023

இந்த முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மிகச் சிறப்பான தொடக்கத்தை எடுத்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில உலகக் கோப்பைகளில் இப்படியான நல்ல தொடக்கம் அந்த அணிக்கு கிடைக்கவில்லை. அதனால் பாகிஸ்தானின் ஆரம்பம் மோசமாக இருந்தது. ஆனால் இந்த முறை வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பாகிஸ்தான் அணி, உலக கோப்பையை விளையாட இந்தியா வந்துள்ளது. அதனால், பாகிஸ்தான் தனது முதல் இரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை வீழ்த்தியது.

மேலும் படிக்க | Shubman Gill: ’வா... பாத்துக்கலாம்’ பிசிசிஐ மெசேஜூக்கு பிறகு அகமதாபாத் பறந்த கில்

இந்தியா - பாகிஸ்தான் மோதல்

ஆனால் இந்த இரண்டு அணிகளும் கத்துக்குட்டி அணிகளாக கருதப்படுகின்றன. இருவரும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதிச் சுற்று மூலம் வந்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தானுக்கு இனிமேல் தான் உண்மையான சோதனை இருக்கிறது. அதாவது அக்டோபர் 14 ஆம் தேதி முதல். அன்றைய நாளில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. ஏற்கனவே பார்ம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் ஷாகின் ஷா அப்ரிடிக்கு, இந்த போட்டிக்கு முன்னதாக ஒரு மோசமான செய்தி கிடைத்துள்ளது. 

இந்திய அணிக்கு திரும்பும் ஷூப்மன் கில்

அது என்னவென்றால் டெங்கு  காய்ச்சல் காரணமாக முதல் இரண்டு லீக் போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடாமல் இருந்த ஷூப்மன் கில், மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். காயச்சலில் இருந்து குணமடைந்திருக்கும் அவர், அகமதாபாத்தில் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஷுப்மான் கில் மீண்டும் களம் இறங்கத் தயாராகிவிட்டார் என்பதற்கு அகமதாபாத்துக்கு வந்ததே சான்றாகும். தற்போது அவர் கிட்டத்தட்ட குணமடைந்து விட்டதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய கோப்பையில் தர்ம அடி

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் தற்போது அற்புதமான ஃபார்மில் உள்ளார். உலகக் கோப்பை தொடங்கும் முன், ஆஸ்திரேலிய தொடரிலும் ரன் குவித்தார். இதனுடன், அவர் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஷஹீன் அப்ரிடியின் ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசினார். 150 ஸ்டைக் ரேட்டில் ஷாகீன் அப்ரிடியை எதிர்கொண்ட சுப்மான் கில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது, பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பார்ம் இல்லாமல் இருக்கும் ஷாகீன் அப்ரிடிக்கு பின்னடைவாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வக்கார் யூனிஸ், ஷாகீன் அப்ரிடி குறித்து பேசும்போது, அவருடைய பந்துவீச்சு முன்னேற்றம் வேண்டும் என கூறியுள்ளார். ஏற்கனவே அவர் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக  விளையாடி இருந்தாலும், உடனடியாக பந்துவீச்சு அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Worldcup 2023: இன்னும் எத்தனை போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News