இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?

கடந்த நவம்பர் 2021 முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறது. அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா சென்றது.  

Written by - RK Spark | Last Updated : May 12, 2024, 01:39 PM IST
  • புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ.
  • சில மாதங்களில் டிராவிட் பதவிக்காலம் முடிவடைகிறது.
  • டி20 உலக கோப்பைக்கு பிறகு முடிய உள்ளது.
இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா? title=

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிய உள்ளது.  இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடி வருகிறது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. ராகுல் டிராவிட் 2021ம் ஆண்டு இரண்டு வருட ஒப்பந்தத்தில் இந்திய அணியில் பயிற்சியாளராக சேர்ந்தார். பின்பு 2024 டி20 உலகக் கோப்பைக்காக நீட்டிக்கப்பட்டார். தற்போது இந்திய அணிக்கு 27வது தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது. இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களாக யார் யார் இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ்.‌‌.. இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் பிளே ஆப் கனவு அம்போ!

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் தலைமை பயிற்சியாளர் 1971ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கேகி தாராபூர் இந்திய கிரிக்கெட் அணியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்திய அணி தனது முதல் ஐசிசி கோப்பையை பிஆர் மேன் சிங் (மேலாளர்) தலைமையில் வென்றது. அவர் பயிற்சியாளராக இல்லாவிட்டாலும் அந்த பாத்திரத்திலும் அவர் இந்திய அணிக்காக பணியாற்றினார்.  1992ம் ஆண்டுக்கு பின்னர் பிசிசிஐ பயிற்சியாளர்களுக்கு நீண்ட ஒப்பந்தங்களை வழங்கும் முடிவுக்கு வந்தது. சந்து போர்டே மற்றும் பிஷன் சிங் பேடி போன்ற இடைக்கால மேலாளர்கள் இந்த புதிய அணுகுமுறையின் கீழ் மாற்றப்பட்டனர். இதன் காரணமாக இந்திய அணியின் நீண்ட கால பயிற்சியாளர்களாக அஜித் வடேகர், சந்தீப் பாட்டீல், மதன் லால் போன்றவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்திய அணியின் பயிற்சியாளராக கபில் தேவ் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் மிக குறுகிய காலம் மட்டுமே பயிற்சியாளராக பணியாற்றினார். 1994 ஆம் ஆண்டு நடந்த தொடரின் போது மனோஜ் பிரபாகர் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  2008 முதல் 2011 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் மிகவும் வெற்றிகரமான இந்திய பயிற்சியாளராக கருதப்படுகிறார். அவரது தலைமையின் கீழ், இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது மற்றும் டெஸ்டில் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது.

ராகுல் டிராவிட்

2018 ஆம் ஆண்டு இந்தியா U-19 அணியை உலகக் கோப்பை வெல்ல வைத்த டிராவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியை எட்டியது மற்றும் ஒருநாள், டெஸ்ட் என இரண்டிலும் நம்பர் ஒன் அணி என்ற பெருமையை பெற்றது.  ட்ராவிட்டிற்கு பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள VVS லக்ஷ்மண் இந்த பதவிக்கு வரலாம். ராகுல் டிராவிட் இல்லாதபோது அவர் சில தொடர்களில் பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆஷிஷ் நெஹ்ராவும் பயிற்சியாளருக்கான போட்டியில் உள்ளார். 2022ல் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் பட்டத்தை வெல்ல இவரது பங்கு முக்கியமானது. மேலும் 2023ல் இறுதிப் போட்டிக்கு வந்தது.  

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்கள்:

1971 - கேகி தாராபூர் (இந்தியா)
1971-74 - ஹேமு அதிகாரி (இந்தியா)
1975 - குலாப்ராய் ராம்சந்த் (இந்தியா)
1978 - தத்தா கெய்க்வாட் (இந்தியா)
1980-81 - சலீம் துரானி  (இந்தியா)
1982 - அசோக் மங்காட் (இந்தியா)
1983-87 - பிஆர் மான் சிங் (மேலாளர்) (இந்தியா)
1988 - சந்து போர்டே (இந்தியா)
1990-91 - பிஷன் சிங் பேடி (இந்தியா)
1991-92 - அப்பாஸ் அலி பெய்க் (இந்தியா)
1992-96 - அஜித் வடேகர் (இந்தியா)
1996 - சந்தீப் பாட்டீல் (இந்தியா)
1996-97 - மதன் லால் (இந்தியா)
1997-99 - அன்ஷுமன் கெய்க்வாட் (இந்தியா)
1999-2000 - கபில் தேவ் (இந்தியா)
2000-05 - ஜான் ரைட் (நியூசிலாந்து)
2005-07 - கிரெக் சேப்பல் (ஆஸ்திரேலியா)
2007 - ரவி சாஸ்திரி (இடைக்காலம்) (இந்தியா)
2007-08 - லால்சந்த் ராஜ்புத் (இந்தியா)
2008-11 - கேரி கிர்ஸ்டன் (தென்னாப்பிரிக்கா)
2011-15 - டங்கன் பிளெட்சர்  (ஜிம்பாப்வே)
2016 - சஞ்சய் பங்கார் (இடைக்காலம்) (இந்தியா)
2016-17 - அனில் கும்ப்ளே (இந்தியா)
2017 - சஞ்சய் பங்கார் (இடைக்காலம்) (இந்தியா)
2017-21 - ரவி சாஸ்திரி (இந்தியா)
2021 முதல் - ராகுல் டிராவிட் (இந்தியா)

மேலும் படிக்க | லக்னோ அணியில் இருந்து விலகும் ராகுல், ஆர்சிபி அணிக்கு ரிட்டன்ஸ்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News