ஆர்சிபி அணிக்கு செக் வைத்த 21 வயதான மயங்க் யாதவ்! திக்கு தெரியாமல் முழிக்கும் விராட் கோலி

RCB vs LSG match Result: மயங்க் யாதவின் துல்லியமான பந்துவீச்சால் ஆர்சிபி அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. தொடர்ச்சியாக அந்த அணி பெறும் 2வது தோல்வியாகும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2024, 11:46 PM IST
  • ஆர்சிபி அணி சந்தித்த மூன்றாவது தோல்வி
  • சொந்த மைதானத்தில் சந்திக்கும் 2வது தோல்வி
  • புள்ளிப் பட்டியலில் 9வது இடத்துக்கு சரிந்தது
ஆர்சிபி அணிக்கு செக் வைத்த 21 வயதான மயங்க் யாதவ்! திக்கு தெரியாமல் முழிக்கும் விராட் கோலி title=

ஆர்சிபி அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ், பவுலிங் எடுத்தார். இதற்கு முன்பு பேட்டிங் எடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பவுலிங் மோசமாக இருந்ததால், எப்படியாவது பேட்டிங்கில் சேஸிங் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்தார். ஆனால் அந்த முடிவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. 

மேலும் படிக்க | ரூட்டை மாற்றிய ஆர்சிபி! பிளானை ஓபனாக சொன்ன கேப்டன் டூபிளெசிஸ்

முதலில் பேட்டிங்ங ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டி காக் 81 ரன்களும், ராகுல் 20 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டரில் ஸ்டொயினஸ் 24 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களும் எடுத்தனர். பூரன் உள்ளிட்டோரின் முக்கியமான கேட்சுகளை ஆர்சிபி அணியினர் விட்டனர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆர்சிபி அணி ஓப்பனிங் சிறப்பாக இருந்தது. விராட் கோலி 22, டு பிளெசிஸ் 19, படிதார் 29 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அதன்பிறகு வந்த மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும், கிரீன் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக அமைந்தது. பின்வரிசையில் லாம்ரோர் அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்தபோதும் அவருக்கு பக்கபலமாக யாரும் விளையாடவில்லை.

அதேநேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த மயங்க் யாதவ் பந்துவீச்சு அபரமாக இருந்தது. 21 வயதான மயங்க் 150 கிலோ மீட்டருக்கும் மேலாக பந்துவீசி ஆர்சிபி அணியை திணறடித்தார். அவரே மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதுவே போட்டியின் திருப்புமுனையாகவும் அமைந்தது. இவர்கள் இருவரும் அவுட்டானதும் போட்டியானது லக்னோ அணி பக்கம் திரும்பியது. முடிவில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்தது. 4 போட்டிகளில் விளையாடி இருக்கும் அந்த அணிக்கு மூன்றாவது தோல்வியாகும். இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு சென்றது. அதேபோல் லக்னோ அணி 2வது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் டுபிளெசிஸ், முக்கியமான கட்டத்தில் இரண்டு மூன்று கேட்சுகளை தவறவிட்டோம், அதுவே போட்டியின் தோல்வியில் முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும் அடுத்த போட்டியில் இந்த தவறுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு மீண்டு வருவோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | Mayank Yadav: மயங்க் யாதவின் வேகத்தில் வீழ்ந்த ஆர்சிபியின் மேக்ஸ்வெல், கிரீன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News