ஐபிஎல் 2024: அவர் ஒருவரை மட்டும் குறி வைக்காதீர்கள் - கீரன் பொல்லார்டு உருக்கம்

Kieron Pollard, Hardik Pandya: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2024, 02:24 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணி தோல்விக்கு யார் காரணம்?
  • பாண்டியாவை மட்டும் காரணம் சொல்வதை ஏற்க மாட்டேன்
  • எம்ஐ பேட்டிங் பயிற்சியாளர் கைரன் பொல்லார்டு விளக்கம்
ஐபிஎல் 2024: அவர் ஒருவரை மட்டும் குறி வைக்காதீர்கள் - கீரன் பொல்லார்டு உருக்கம் title=

IPL 2024, MI vs CSK: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொல்லார்ட்டு, மும்பை அணியின் தோல்வி குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அணியில் இருக்கும் ஒரே ஒரு பிளேயரை மட்டும் தோல்விக்கு காரணமாக குற்றம்சாட்டுவதை ஏற்கமாட்டேன் என தெரிவித்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறந்த பிளேயர் என கூறிய பொல்லார்டு, அவருடைய ஆட்டம் தோல்விக்கு காரணம் என கூறுவது சரியில்லை எனவும் கூறினார். ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. அவரின் கடைசி ஓவரில் தோனி விளாசிய 3 சிக்சர்களே மும்பையின் தோல்விக்கான ரன்களாக இருந்தது.

மேலும் படிக்க | Thala For A Reason: ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சிறந்த 7 மைல்கல்!

ஹர்திக் பாண்டியா பவுலிங்

மூன்று ஓவர்களில் மொத்தம் 43 ரன்களை வாரிக் கொடுத்த பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். லைன் அன்ட் லென்த் சரியாக போடுவதில் மிகவும் சிரமப்பட்ட அவர் ஓவரை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் குறிவைத்தனர். பாண்டியாவின் கடைசி ஓவரில் எஸ் தோனி 3 சிக்சர்கள் விளாசிய நிலையில், 2 வைடுகளையும் வீசினார். இதனால் ஆட்டம் சென்னை பக்கம் சாய்ந்தது. ஆகாஷ் மத்வால் கடைசி ஓவரை வீசுவதில் சிறப்பான ரெக்கார்டு வைத்திருந்தாலும், அவருக்கு பதிலாக பாண்டியா வீசியது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாதகமாக அமைந்தது. பேட்டிங்கிலும் முக்கியமான கட்டத்தில் 6 பந்துகளில் வெறும் 2 ரன்கள் அடித்து அவுட்டானார்.

பொல்லார்டு விளக்கம்

இது குறித்து விளக்கம் அளித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு, " இது போன்ற நாட்களை கிரிக்கெட்டில் நீங்கள் சந்திக்க வேண்டும். தனிப்பட்ட வீரர்களை குறிவைப்பதில் நான் உடன்படவில்லை. கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. பாண்டியா தன்னம்பிக்கை கொண்டவர். சக வீரர்களுடன் நல்லுறவு கொண்டவர். கிரிக்கெட்டில் உங்களுக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு. தனது திறமைகளைத் தொடரவும், தனது திறமையை வெளிப்படுத்தவும் கடுமையாக உழைக்கும் ஒருவராக பாண்டியாவை நான் பார்க்கிறேன்,” என்று தெரிவித்தார். பாண்டியா இந்திய அணிக்கான 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு அவர் நிச்சயம் விளையாடுவார், எங்களால் முடிந்த ஊக்கத்தை அவருக்கு கொடுப்போம் என்றும் பொல்லார்டு தெரிவித்தார்.

ஐபிஎல் 2024ல் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம்

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024 இல் இதுவரை அவரது சிறந்த ஃபார்மில் இல்லை. பேட்டிங்கில் பாண்டியாவால் பெரிய இன்னிங்ஸ் எதையும் விளையாட முடியவில்லை. இதுவரை 6 போட்டிகளில் 26.20 சராசரியிலும் 145.56 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 131 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2024ல் இதுவரை ஹர்திக் பாண்டியாவின் சிறந்த ஸ்கோர் 39 ரன்கள் மட்டுமே. பந்துவீச்சிலும் ஹர்திக் பாண்டியா சூப்பர் ஃப்ளாப் என்பதை நிரூபித்துள்ளார். இதுவரை, ஹர்திக் பாண்டியா 6 போட்டிகளில் 11 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். அதில் 132 ரன்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார். 

பாண்டியா கேப்டன்சி மீது புகார்

இதனால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பலரும் விமர்சித்து வருகின்றனர். அவர் கேப்டன்சியில் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருப்பதாகவும், அவர் எடுக்கும் முடிவுகளாலேயே மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால், அவரை கேப்டன்சி பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, ரோகித் சர்மாவை மீண்டும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது ஹர்திக் பாண்டியாவுக்கும் நல்லதாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால், மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்க ரோகித் சர்மா தயாராக இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News