Ishan Kishan: வெளியே அனுப்பிய ரோகித்... பாண்டியாவுடன் கூட்டணி போட்ட இஷான்!

இந்திய அணியில் இருந்து வெளியேறிய இஷான் கிஷன் இப்போது ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாள் ரோகித் அணியில் இருந்த அவர் இப்போது பாண்டியா அணிக்கு மாறியிருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 8, 2024, 12:44 PM IST
  • மீண்டும் கிரிக்கெட் பயிற்சியில் இஷான் கிஷன்
  • ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து பயிற்சி
  • நேரடியாக ஐபிஎல் போட்டி விளையாட திட்டம்
Ishan Kishan: வெளியே அனுப்பிய ரோகித்... பாண்டியாவுடன் கூட்டணி போட்ட இஷான்! title=

ரோகித் சர்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்த இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ச்சியாக விளையாடி வந்தார். ரோகித் சர்மா இந்திய அணயின் கேப்டனான பிறகு 20 ஓவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டார். வாய்ப்பு கிடைத்தபோது மகிழ்ச்சியில் இருந்த இஷான் கிஷன், ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா மீது அதிருப்தியடைய தொடங்கினார். அதாவது அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேப்டனாக இருந்த ரோகித், இஷான் கிஷனை வெளியிலேயே உட்கார வைத்தார்.

வரிசையாக அனைத்து தொடர்களிலும் இந்திய அணியில் இடம்பிடித்தாலும் பிளேயிங் லெவனில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக, களத்தில் விளையாடும் பிளேயர்களுக்கு தண்ணீர் கொண்டு கொடுப்பது, பேட், ஹெல்மெட் கொடுப்பதை செய்து கொண்டிருந்தார். இது அவருக்கு அதிருப்தி மற்றும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கிறது. ஒருகட்டத்தில் இடது கை பேட்ஸ்மேனாக இருந்த ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டு பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். இது இன்னும் கூடுதல் அதிருப்தியை இஷான் கிஷனுக்கு கொடுத்தது. தான் ஒரு இடது கை பேட்ஸ்மேனாக அணிக்குள் இருக்கும்போது, தன்னை பரிசீலிக்காமல், இளம் வீரரான ஜெய்ஸ்வாலை அழைத்தது ஏன்? என்ற கேள்விக்கு அவரால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் படிக்க | விராட் கோலி, பிசிசிஐ இடையே என்ன பிரச்சனை? எப்போது மீண்டும் திரும்புவார்?

ஒரு கட்டத்தில் தன்னை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஓரங்கட்டுவதாக அணிக்குள் இருந்து கொண்டே ஆதங்கப்படத் தொடங்கினார் இஷான் கிஷன். ஜெய்ஸ்வாலுக்கு விளையாட வாய்ப்பு கொடுத்ததால், இதற்குமேல் அணிக்குள் இருப்பது சரியாகாது என்ற முடிவுக்கு வந்த அவர், தென்னாப்பிரிக்கா தொடரில் பாதியிலேயே விடுப்பு வேண்டும் என கேட்டுவிட்டு துபாய் சென்றுவிட்டார். அங்கு ரிஷப் பன்ட், தோனி ஆகியோருடன் நேரத்தை செலவிட்ட இஷான் கிஷன் இந்தியாவிற்கு வந்தபிறகும் கிரிக்கெட் ஏதும் விளையாடாமல் இருந்து வந்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசும்போது, இஷான்கிஷன் அவராகவே விடுப்பு வேண்டும் என கேட்டுவிட்டு சென்றார். அவரின் முடிவை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டோம். அவர் கிரிக்கெட் விளையாட தொடங்கினால் இந்திய அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கிறோம் என தெரிவித்தார். அதாவது இஷான் கிஷன் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என மறைமுகமாக கூறினார். ஆனால் இஷான் கிஷன் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவது குறித்து வெளிப்படையாக ஏதும் அறிவிக்கவில்லை. 

இந்த சூழலில் பரோடாவில் இருக்கும் கிரண்மோர் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார் இஷான் கிஷன். அதுவும் ஹர்திக் பாண்டியாவுடன் கூட்டாக பயிற்சியில் ஈடுபடுகிறார். அதாவது, இவ்வளவு நாள் ரோகித் சர்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்த இஷான், இப்போது ஹர்திக் பாண்டியா  அணிக்கு தான் தாவிவிட்டதை சூசகமாக தெரிவித்துள்ளார். அத்துடன் நேரடியாக ஐபிஎல் போட்டியில் விளையாடவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரஞ்சி போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்காக தான் இஷான் கிஷன் விளையாடுகிறார். ஆனால், தங்களது அணிக்கு விளையாடுவது குறித்து இஷான் கிஷன் ஏதும் தெரிவிக்கவில்லை என அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதனால், ராகுல் டிராவிட்டின் அறிவுரையை ஏதும் மதிக்காமல்,கேட்காமல் தான் நேரடியாக ஐபிஎல் போட்டி விளையாடி என்னுடைய திறமையை நிரூபித்திக் கொள்கிறேன் என்ற மன நிலையில் இப்போது அவர் இருப்பது தெளிவாகிறது. இப்படியான சூழலில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தும் இஷான் கிஷன் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணிக்காக நீண்ட நாட்களாக அவர் விளையாடாமல் இருப்பதால் பிசிசிஐ அவரை சம்பள கிரேடில் இருந்து நீக்கவும் வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | U19 World Cup: 19 வயதுகுட்பட்டோர் உலக கோப்பையை வென்று கொடுத்த இந்திய கேப்டன்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News