செம ஃபார்மில் இருக்கிறாங்க...இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள்: சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் போட்டியில் செம ஃபார்மில் விளையாடும் 2 வீரர்களுக்கு இந்த ஆண்டே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 12, 2023, 02:42 PM IST
  • இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்
  • பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா வலியுறுத்தல்
  • உலக கோப்பையில் விளையாட வேண்டும்
செம ஃபார்மில் இருக்கிறாங்க...இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள்: சுரேஷ் ரெய்னா title=

ஜொலிக்கும் இளம் வீரர்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் திலக் வர்மா, ஜெய்ஷ்வால், ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒரீரு போட்டிகளில் அல்லாமல் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் ரன்களை குவித்து வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தும் அளவிற்கு அபாரமாக செயல்பட்டார் திலக் வர்மா. எட்டு போட்டிகளில் கிட்டத்தட்ட 240 ரன்கள் அடித்திருந்தார். அதன் பிறகு உடல்நிலையில் பிரச்சனை காரணமாக தற்போது வெளியில் இருக்கிறார்.

மேலும் படிக்க | IPL 2023: தீபக் சஹாரின் தலையிலேயே போட்ட தல... தோனியின் என்ட்ரியால் எச்சரித்த ஆப்பிள் வாட்ச் - சுவாரஸ்ய சம்பவங்கள்!

ஜெய்ஷ்வால் வாண வேடிக்கை

இந்த நேரத்தில் திலக் வர்மாவிற்கு பதிலாக உள்ளே வந்த நேகல் வதேரா அடுத்தடுத்து இரண்டு அரைசதங்கள் அடித்து அவரும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த வருடம் பட்லர் எதிர்பார்த்தவாறு செயல்படவில்லை. ஆனால் அவற்றை மறக்கடிக்கும் விதமாக யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஆடிவரும் ஆட்டம் அபாரமாக இருந்திருக்கிறது. ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் உட்பட 12 போட்டிகளில் 575 ரன்கள் குறித்து ஆரஞ்சு தொப்பிக்கு கடும் சவாலாக இருந்து வருகிறார். இவரது ஸ்ட்ரைக்கில் கிட்டத்தட்ட 175 ஆகும். இந்த அளவிற்கு அதிரடியாகவும் செயல்பட்டு வருகிறார்.

ரிங்கு சிங் அபாரம்

கொல்கத்தா அணிக்கு யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ரிங்கு சிங் மிகச்சிறப்பாக பினிஷிங் செய்து வருகிறார். கீழ் வரிசையில் களமிறங்கி 12 போட்டிகளில் 350 ரன்கள் விளாசியுள்ளார். அவை அனைத்தும் மிக முக்கியமான கட்டத்தில் வந்தவை. மூன்று போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக கடைசி ஓவரில் பினிஷிங் செய்து கொடுத்திருக்கிறார். இப்படி இந்திய அணிக்கு விளையாடாத இளம் வீரர்கள் சிலர் இந்த வருட ஐபிஎல் சீசனில் மிகச்சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். 

சுரேஷ் ரெய்னா வலியுறுத்தல்

இதனை குறிப்பிட்டு பேசிய சுரேஷ் ரெய்னா, விரைவில் இரண்டு வீரர்கள் இந்த வருட உலககோப்பையிலேயே விளையாட வேண்டும். அவர்களது பார்மை பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். ஜெய்ஸ்வால் தனது வாழ்வின் சிறந்த பார்மில் இருக்கிறார் மற்றும் ரிங்கு சிங் பினிஷிங் உலகத்தரம். இவர்கள் இருவரும் இந்த வருட ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் தங்களது பங்களிப்பை கொடுத்து அசாத்தியமாக விளையாடுகின்றனர். இந்த வருடம் உலககோப்பை இந்தியாவில் நடைபெறுவதால், இவர்களது பார்மை பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் இருவரையும் இந்த வருட உலகக்கோப்பையிலேயே பார்க்க விரும்புகிறேன். தேர்வு குழுவினருக்கு இதை நான் வேண்டுகோளாகவும் பரிந்துரையாகவும் வைக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க | IPL 2023: பிளே ஆஃப்க்கு போட்டி போடும் 10 அணிகள்! யாருக்கு தான் வாய்ப்பு அதிகம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News