கோப்பையை வாங்கிய கையுடன் மருத்துவமனை செல்லும் தோனி...? - வெளியான தகவல்!

MS Dhoni Injury: சென்னை அணி தோனியின் தலைமையில் 5ஆவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற நிலையில், தோனி விரைவில் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : May 31, 2023, 05:35 PM IST
  • 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே கோப்பையை வென்றுள்ளது.
  • தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரையும் விளையாடுவார் என தெரிகிறது.
  • மேலும், விரைவில் தோனி வெற்றி கொண்டாட்டத்திற்கு சென்னை வருவார் என கூறப்படுகிறது.
கோப்பையை வாங்கிய கையுடன் மருத்துவமனை செல்லும் தோனி...? - வெளியான தகவல்! title=

MS Dhoni Injury: மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் 5ஆவது முறையாக கோப்பையை நேற்று முன்தினம் வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்தது.

மும்பையில் தோனி?

இந்த சீசன் முழுவதும், சிஎஸ்கே கேப்டன் தோனி முழங்கால் காயத்துடன் விளையாடியுள்ளார். தோனி இந்த வாரம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் காயம் தொடர்பான பல பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2023 சீசனில், தோனி முழங்கால் காயத்துடன் டி20 லீக்கில் விளையாடுவதாக சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பொதுவெளியில் அறிவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் ஃப்ளெமிங், "தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சில அசைவுகளில் இது அவருக்கு இடையூறாக இருக்கிறது. இருப்பினும், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அவர் எங்களின் சிறப்பான வீரர்களில் ஒருவர். அவரது உடற்தகுதி எப்போதும் மிகவும் தொழில்முறையாகவே இருந்து வருகிறது" என கூறியிருந்தார். 

மேலும் படிக்க | ஐபிஎல் 2023 கோப்பையை வென்ற பிறகு டிரஸ்ஸிங் ரூமில் தோனி பேசிய வார்த்தைகள்!

கால் முட்டியில் ஐஸ் கட்டியுடன்...

சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கேயின் கடைசி லீக் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற சிஎஸ்கே அணியின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில், தோனி முழங்காலில் ஐஸ் கட்டியுடன் மைதானத்தை சுற்றிவந்ததை காண முடிந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றிக்குப் பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், தோனியுடன் ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த படத்திலும் தோனி அதே பனிக்கட்டியை காயம்பட்ட முழங்காலில் அணிந்திருப்பதை காண முடிந்தது.

டெல்லிக்கு எதிரான போட்டி முடிந்ததும், இர்ஃபான் பதான் சிஎஸ்கேயின் டிரஸ்ஸிங் அறைக்குள் நுழைந்து தோனியை சந்தித்தார். சிறந்த நண்பர்களான இருவரும், ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து கேமராக்களுக்கு போஸ் கொடுத்தனர். பின்னர், இர்பான் தனது ரசிகர்களுடன் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு,'நாங்கள் சந்தித்த மற்றும் எங்கள் நல்ல பழைய நாட்களை நினைவில் கொள்ளாமல் இருந்ததில்லை. நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் சில வேடிக்கையான நினைவுகள் வாழ்க்கையில் திரும்பி வருகின்றன' என பதிவிட்டிருந்தார்.

ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய 'தல'

சென்னை அணி, ஐபிஎல் 2023 சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, 2024 சீசனிலும் அணியில் தொடர விரும்புவதாக தோனி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்."நீங்கள் இந்த வெற்றி பெற்ற சந்தர்ப்ப சூழ்நிலையில் பார்த்தால், ஓய்வு பெறுவதை அறிவிப்பதற்கு இதுவே சிறந்த நேரமாக இருக்கும். நான் ஓய்வை அறிவிப்பது எளிதான விஷயம். 

ஆனால் ஒன்பது மாதங்கள் கடினமாக உழைத்து மேலும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடுவது கடினமான விஷயம். உடல் தாங்க வேண்டும். ஆனால் சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து நான் பெற்ற அன்பின் அளவு, இன்னும் ஒரு சீசனில் விளையாடுவது அவர்களுக்கு ஒரு பரிசாக இருக்கும். அவர்கள் தங்கள் அன்பையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்திய விதம், இது அவர்களுக்காக நான் செய்ய வேண்டிய ஒன்று" என தோனி கூறியிருந்தது கோடாணக்கோடி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது எனலாம். 

மேலும் படிக்க | கோப்பையை கையில் வாங்கியதும் தோனி செய்த காரியம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News