ஹைதராபாத்தை அடக்கியது சிஎஸ்கே... சேப்பாக்கத்தில் வெற்றி - கான்வே அசத்தல் அரைசதம்!

IPL 2023 CSK vs SRH: ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் தங்களது 4ஆவது வெற்றியை பதிவு செய்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 21, 2023, 11:27 PM IST
  • ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
  • டேவான் கான்வே அரைசதம் அடித்து அசத்தினார்.
ஹைதராபாத்தை அடக்கியது சிஎஸ்கே... சேப்பாக்கத்தில் வெற்றி - கான்வே அசத்தல் அரைசதம்! title=

 IPL 2023 CSK vs SRH: நடப்பு ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸை வென்றார். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அவர் பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஓப்பனராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 34(26) ரன்களையும், ராகுல் திரிபாதி 21(21) ரன்களையும் எடுத்தனர். சென்னை அணி பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் சிங், பதிரானா, தீக்ஷனா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

மேலும் படிக்க | 40 வயசாச்சு! வேகம் குறைஞ்சிடுச்சு! விராட் கோஹ்லியை விமர்சிக்கும் மஞ்ச்ரேக்கர்

தொடர்ந்து, 135 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு அசத்தலான தொடக்கத்தை அளித்தது கெய்க்வாட் - கான்வே ஜோடி. குறிப்பாக டேவான் கான்வேவின் அதிரடியால், யான்சன் வீசிய 6ஆவது ஓவரில் 23 ரன்கள் குவிக்கப்பட்டது. இதிஸ், கான்வே 4 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் அடித்தார். அவர் அரைசதம் தாண்டியிருந்த நிலையில், இந்த ஜோடி, 11 ஓவர்களில் 87 ரன்களை குவித்திருந்தது. அப்போது, துரதிருஷ்டவசமாக, ருதுராஜ் கெய்க்வாட் 35(30) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ரஹானே, ராயுடு ஆகியோர் தலா 9 ரன்களை எடுத்தனர்.

இருப்பினும், கான்வேவின் அதிரடியால் சென்னை அணி, 18.4 ஓவர்களில் இலக்கை அடைந்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்வே 77 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் பந்துவீச்சில் மார்க்கண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை ஜடேஜா கைப்பற்றினார். வெற்றிபெற்றாலும், புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 2 தோல்வி) 3ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 தோல்வி) 9ஆவது இடத்திலும் உள்ளன.

மேலும் படிக்க | உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை யாரால் நிரப்பமுடியும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News