IPL: சிஎஸ்கே அணிக்கு மகிழ்ச்சி செய்தி... காயத்தில் இருந்து மீண்ட முக்கிய வீரர் - இனி பவர்பிளேயில் பயமில்லை!

IPL 2023 CSK vs SRH: காயத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை அணியின் முக்கிய வீரர், ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 21, 2023, 05:30 PM IST
  • சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியடைந்தது.
  • சென்னை அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
IPL: சிஎஸ்கே அணிக்கு மகிழ்ச்சி செய்தி... காயத்தில் இருந்து மீண்ட முக்கிய வீரர் - இனி பவர்பிளேயில் பயமில்லை! title=

IPL 2023 CSK vs SRH: நடப்பு ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. குஜராத், ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் தோல்வியடைந்தது. மேலும், சேப்பாக்கத்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் சென்னை தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணிக்கு இந்த சீசனில் பல நன்மைகள் இருந்தாலும், வீரர்களின் காயம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம். 

தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே, கைல் ஜேமீசன், முகேஷ் சௌத்ரி உள்ளிட்டோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். தொடர்ந்து, ஜேமீசனுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட மகாலாவும் காயம் காரணம் தற்போது ஓய்வில் உள்ளார். மினி ஏலத்தில் சென்னை அணியால் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவரும் விரைவில் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | CSKvsSRH: சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸை எதிர்கொள்ளும் சிஎஸ்கே..! பிளேயிங் லெவனில் பென் ஸ்டோக்ஸ்?

குறிப்பாக, சிஎஸ்கே அணியின் ஆஸ்தான பவர்பிளே வேகப்பந்துவீச்சாளரான தீபக் சஹாரும் காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று அணியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. பவர்பிளேயின் போது பந்துவீச்சில் சிஎஸ்கே அணி அதிக ரன்களை கொடுக்கும் நிலையில், தீபக் சஹார் பவர்பிளேவில் மட்டும் பந்துவீசி விட்டு இம்பாக்ட் சப் வீரராக மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. 

தற்போது அவரின் வருகையால் அணியின் பந்துவீச்சு பலம்பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது இருப்பினும், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், பதிரானா ஆகியோர் சீராக விளையாடி வருவதால் தோனி இந்த கூட்டணியை உடைக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி, தோனியின் கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் நிலையில், கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுத்தது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால், தோனி நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவர் இன்றைய போட்டியில் விளையாடுவதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வென்று, சேப்பாக்கத்தில் கொடியை நாட்ட சிஎஸ்கே அணி முனைப்போடு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க | IPL 2023: உருண்டு புரண்டு முதல் வெற்றியை பெற்ற டெல்லி... கொல்கத்தாவின் போராட்டம் வீண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News