வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பை தட்டி தூக்கிய ஐபிஎல் அணி! யார் தெரியுமா?

Shamar Joseph: காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் மார்க் வுட்டுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஷமர் ஜோசப்பை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 10, 2024, 07:05 PM IST
  • மார்க் வுட்டுக்கு பதிலாக ஷமர் ஜோசப்.
  • தட்டி தூக்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.
  • காயம் காரணமாக விலகி உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பை தட்டி தூக்கிய ஐபிஎல் அணி! யார் தெரியுமா? title=

Shamar Joseph: இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஷமர் ஜோசப்பை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எடுத்துள்ளது.  ஷமர் ஜோசப்பை ரூ. 3 கோடிக்கு தங்கள் அணியில் எடுத்துள்ளது.  22 வயதான ஷமர் ஜோசப்பை சமீபத்தில் கிரிக்கெட் உலகில் மிகவும் மதிப்புமிக்க வீரராக இருந்தார்.  சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடிய இவர் மீது அனைத்து லீக் உரிமையாளர்களின் கண்களும் இருந்தது.  இந்நிலையில், ஐபிஎல்லில் எந்த அணி இவரை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தட்டி தூக்கி உள்ளது.

மேலும் படிக்க | பிருத்வி ஷாவின் அசாத்திய சாதனை... இந்திய கிரிக்கெட்டில் இதுதான் முதல்முறை - என்ன தெரியுமா?

இதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக்கில் முதல் முறையாக விளையாட உள்ளார் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜோசப், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்தை அவுட் செய்தார். முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தாலும், இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார் ஷமர் ஜோசப். காலில் காயம் இருந்தபோதிலும், இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.  இதன் மூலம் 1997-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் வெஸ்ட் இண்டீஸ் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெறுவதற்கு முன்பு, ஜோசப் தனது குடும்பத்தை காப்பாற்ற தனியார் நிறுவனத்தில் பாடிகார்டாக பணிபுரிந்துள்ளார்.  இருப்பினும், கிரிக்கெட் மீதான காதலால் அவர் தனது வேலையை விட்டுவிட்டு முழுநேர கிரிக்கெட்டில் விளையாட தொடங்கினார்.  கடந்த பிப்ரவரி 2023ல் கயானா ஹார்பி ஈகிள்ஸ் அணிக்காக அவர் முதல்தர கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார்.  அந்த சீசனில் அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய போதிலும், ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி, தேசிய அணியில் இடம் பெரும் வாய்ப்பை உருவாக்கி கொண்டார்.  தற்போது ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் கடந்த 2022 சீசனில் 7.50 கோடிக்கு மார்க் வுட் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.  இருப்பினும், முழங்கை காயம் காரணமாக வுட் அந்த சீசனில் விளையாடவில்லை. பின்பு கடந்த 2023 ஐபிஎல்லில் விளையாடிய வுட் நான்கு போட்டிகளில் விளையாடி 11.82 சராசரியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். மார்க் வூட் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 28 டி 20 போட்டிகளில் 45 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க | இந்திய அணியில் என்டிரியாகப்போகும் சீனியர் பிளேயர்..! ரஞ்சி டிராபியில் செஞ்சூரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News