ஐபிஎல் 2024 தேதிகளை இறுதி செய்த பிசிசிஐ... கொண்டாட தயாராகுங்கள் ரசிகர்களே..!

ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ள பிசிசிஐ, மே 26 ஆம் தேதி இறுதிப் போட்டி நடத்த உத்தேசித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் ஐபிஎல் போட்டிகளுக்கான இறுதி பட்டியல் வெளியாகும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2024, 06:48 AM IST
  • ஐபிஎல் 2024 தேதிகளை இறுதி செய்த பிசிசிஐ
  • தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்காக வெயிட்டிங்
  • மார்ச் 22 ஆம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்
ஐபிஎல் 2024 தேதிகளை இறுதி செய்த பிசிசிஐ... கொண்டாட தயாராகுங்கள் ரசிகர்களே..! title=

ஐபிஎல் 2024 தேதிகள் கிரிக்கெட் 2024 தேதிகள் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் இது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல்கள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றுதான் தெரிகிறது. இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ நிர்வாகி கூறியதாக வெளியான செய்தியில், “நாங்கள் ஐபிஎல் அட்டவணை பற்றி விவாதித்தோம். 

மேலும் படிக்க | டென்னிஸ் வரலாற்றில் இந்தியரின் மகத்தான சாதனை... 43 வயதிலும் மிரட்டும் போபண்ணா! 

பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவலுக்காகக் காத்திருப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. தேர்தல்கள் ஐபிஎல் நேரத்தில் வரக்கூடும். “இந்திய மைதானங்களில்தான் நடைபெறும் இது பற்றி எந்த கேள்வியும் இல்லை. வேறு நாட்டுக்கு மாற்றுவது என்ற யோசனையும் இல்லை. வாக்குப்பதிவுத் தேதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஏனெனில் அதன் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து, அங்கிருந்து அதை முன்னெடுத்துச் செல்வோம். 

முழுப் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடனும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்றார். அனைத்து வீரர்களும் பங்கேற்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று பிசிசிஐ ஐபிஎல் அணி நிர்வாகங்களிடம் தெரிவித்துள்ளதாகவும் ஒரு சில ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டாடா குழுமம் ஐபிஎல் தலைமை ஸ்பான்சர்ஷிப் உரிமையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. பெண்கள் பிரீமியர் லீக்கின் தலைமை ஸ்பான்சர்ஷிப் உரிமைகளையும் டாடா குழுமமே வைத்துள்ளது.

மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டிகளுக்கான தேதி இன்னும் சில நாட்களில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. மகளிர் பிரிமியர் லீக் பிப்ரவரி 22 முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் கடந்த ஆண்டு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது அந்த அணி. 

மேலும் படிக்க | IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்... நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது? - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News