ருதுராஜ் கைக்வாட்-டை தொடர்ந்து புறக்கணித்து வரும் இந்திய அணி!

ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ருதுராஜ் கைக்வாட்.  

Written by - RK Spark | Last Updated : Jan 23, 2022, 02:36 PM IST
  • முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று தொடரையும் இழந்தது இந்தியா.
  • இந்த ஆண்டு ஐபிஎல்-ல் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் ருதுராஜ்.
ருதுராஜ் கைக்வாட்-டை தொடர்ந்து புறக்கணித்து வரும் இந்திய அணி!  title=

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.  முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று தொடரையும் இழந்தது இந்தியா.  இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா, சூரியகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ் ஆகியோர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர்.  இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கைக்வாட்டிற்கு (ruturaj gaikwad) வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

ALSO READ | கே.எல். ராகுல் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி!

ருதுராஜ் கைக்வாட்டிற்கு (ruturaj gaikwad) இந்தப்போட்டியில் மட்டுமின்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.  நியூசிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றதும், மூன்றாவது போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த சமயத்திலும் ருதுராஜ் கைக்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.  அதேபோல் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

rutraj

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அனைவரும் பாராட்டும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ருதுராஜ் கைக்வாட்.  16 போட்டிகளில் 635 ரன்களுடன் 45.35 சராசரியையும் கொண்டு இருந்தார்.  2021 ஐபிஎல்-ல் அதிகபட்சமாக 101 ரன்கள் அடித்திருந்தார் ருதுராஜ். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல்-ல் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.  கடைசியாக ஜூலை மாதம் நடைபெற்ற ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி இரண்டு போட்டியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.  அதன்பிறகு ஒவ்வொரு தொடரிலும் அணியில் எடுத்தும் இவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்து வருவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தி இருந்தார் ருதுராஜ்.  

CSK star Ruturaj Gaikwad scores 3 Centuries in 3 days of Vijay Hazare  Trophy 2021

ALSO READ | ஆரஞ்சு கேப்பை கைப்பற்றிய ருத்ராஜ் கெய்குவாட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News