கே.எல்.ராகுலை விமர்சிக்காதீர்கள் - சுனில் கவாஸ்கர் சப்போர்ட்

கே.எல்.ராகுலின் பேட்டிங்கை விமர்சிக்க வேண்டாமென்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 27, 2022, 07:15 PM IST
  • கே.எல். ராகுல் ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார்
  • அவர் மீது பலரும் விமர்சனம் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்
  • சுனில் கவாஸ்கர் ராகுலுக்கு சப்போர்ட் செய்துள்ளார்
 கே.எல்.ராகுலை விமர்சிக்காதீர்கள் - சுனில் கவாஸ்கர் சப்போர்ட் title=

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குபவர் கே.எல்.ராகுல். அதிரடி ஆட்டக்காரரான இவர் சமீபகாலமாக ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த டி20 தொடரில் முதல் போட்டியில் 55 ரன்கள் எடுத்த அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் முறையே 10 ரன்களும், 1 ரன்னும் எடுத்தார். டி20 உலகக்கோப்பை நெருங்கிவரும் சூழலில் ராகுலின் இந்த ஃபார்ம் அவுட் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இதனையடுத்து அவர் மீது பலரும் விமர்சனத்தை வைக்க தொடங்கினர்.

ஆனால் அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். ராகுலின் ஃபார்ம் குறித்து பேசிய சுனில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் அரை சதம் அடித்தார். இரண்டாவது ஆட்டத்தில் மழை காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. எனவே அவர் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டிய சூழல் இருந்தது. இதனால் லோகேஷ் ராகுல் அந்த போட்டியில் தனது விக்கெட்டை அணிக்காக தியாகம் செய்தார். 

Rahul

அடுத்ததாக நடந்த மூன்றாவது போட்டியில் ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டி இருந்தது. இது ஒருபோதும் எளிதானது அல்ல. அந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை அளிக்க அவர் விரும்பினார். இதனால் அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தார். அன்றும் தனது விக்கெட்டை அவர் தியாகம் செய்தார். அவரை விமர்சிக்க வேண்டாம். கோலியைப்போல லோகேஷ் ராகுல் சரியான ஷாட்களை ஆடும்போது அவரை தடுக்க முடியாது. சில தேவையில்லாத ஷாட்களை தவிர்த்தால் ரன்களை குவித்துக்கொண்டே இருப்பார்” என்றார்.

மேலும் படிக்க | இந்தியா உலகத்தரம் வாய்ந்த அணி - ஆஸ்திரேலிய கேப்டன் புகழாரம்

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இவ்விரு அணிகளுக்கெதிரான முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இதிலும் ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Trending News