FIFA_2018: பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்!!

பெல்ஜியம் மிரட்டல் ஆட்டம்... பிரேசிலை வெளியேற்றியது... 2-1 என வென்று அரை இறுதி முன்னேறியது!

Last Updated : Jul 7, 2018, 11:02 AM IST
FIFA_2018: பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பெல்ஜியம்!! title=

பெல்ஜியம் மிரட்டல் ஆட்டம்... பிரேசிலை வெளியேற்றியது... 2-1 என வென்று அரை இறுதி முன்னேறியது!

இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி - ரெட் டெவில்ஸ் என அழைக்கப்படும் பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை,  சாடுலி (Chadli) கிக் அடிக்க,  அதை தடுக்க முயற்சித்த பிரேசில் வீரர் ஃபர்னாண்டிகோ (Fernandinho) கையில் பட்டு சேம் சைட் கோல் ஆனது.

இதனால் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 31 வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாகு பந்தை பாஸ் கொடுக்க அதை சாமர்த்தியமாக கோலாக மாற்றினார் பிரய்னே( Bruyne). பின்னர் ஆட்டத்தின் 76 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஆகஸ்டோ (Augusto),  கோல் அடித்தார்.  இறுதியில் பிரேசில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

இதனைத்தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை அரையிறுதியில் பெல்ஜியம் - பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

Trending News