Dinesh Karthik: கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு - அறிவிப்பு விரைவில்

Dinesh Karthik Retires: விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் வரும் ஐபிஎல் தொடருடன் முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு  பெற இருக்கிறார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 7, 2024, 02:37 PM IST
  • ஓய்வை அறிவிக்கிறார் தினேஷ் கார்த்திக்
  • வரும் ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசி
  • முழுநேர வர்ணனையாளராக மாறுகிறார்
Dinesh Karthik: கிரிக்கெட்டில் இருந்து  தினேஷ் கார்த்திக் ஓய்வு - அறிவிப்பு விரைவில் title=

இந்திய அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். அவர் வரும் ஐபிஎல் சீசன் 2024 தொடருக்குப் பிறகு முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார். 16 ஐபிஎல் சீசன்களில் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக், 17வது ஐபிஎல் தொடருடன் தன்னுடைய தொழில்முறை கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுக்க இருக்கிறார். 

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் கடந்த 16 ஆண்டுகளாக டெல்லி கேப்பிட்டல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடி இருக்கிறார். தற்போது 39 வயதாகும் அவர், சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்திய அணியில் இளம் வீரர்களே வாய்ப்புக்காக கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இனி அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது. தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக இருக்கும் தினேஷ் கார்த்திக், வரும் ஐபிஎல் தொடருக்கு பிறகு முழுநேர வர்ணனையாளராக மாற இருக்கிறார். 

மேலும் படிக்க | தாத்தா, பேரன் என இரட்டை வேடத்தில் நடித்து அசதியுள்ள தோனி!

ஆர்சிபி அணிக்காக இந்த சீசனில் தினேஷ்  கார்த்திக் விளையாடுவார். அதற்கான பயிற்சிகளையும் அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார். ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களிலும் விளையாடிய 7 வீர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். இந்தப் பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விருத்திமான் சாஹா மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எம்எஸ் தோனியும் வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்குப் பிறகு ஓய்வு பெறக்கூடும் என்பதால் அவரோடு சேர்ந்து தினேஷ் கார்த்திக் தன்னுடைய கிரிக்கெட் பயணத்துக்கு விடை கொடுக்க இருக்கிறார்.

ஐபிஎல்-ல் இதுவரை 16 சீசன்களில் 240 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 26 சராசரியுடன் 4516 ரன்கள் எடுத்துள்ளார். 20 அரை சதங்கள் அடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தினேஷ் கார்த்திக்கிற்கு மிகச்சிறப்பாக அமைந்தது. அந்த தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அதே ஆண்டில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். 

மேலும் படிக்க | IND vs PAK: இந்தியா பாகிஸ்தான் டி20 உலக கோப்பை டிக்கெட் விலை ரூ.1.86 கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News