தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்பு

LSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 19, 2024, 10:10 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி பேட்டிங்
  • லக்னோ மைதானத்தில் சரவெடி காட்டிய தோனி
  • 101 மீட்டர் சிக்சர் அடித்து மெய்சிலிர்க்க வைத்தார்
தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்பு title=
சிஎஸ்கே அணி முதல் பேட்டிங்
 
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து ரன்கள் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரச்சின் ரவீந்திரா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் வெளியேறினார். அஜிங்க்யா ரஹானேவும் 24 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
 
மொயீன் அலி ஹாட்ரிக் சிக்சர்ஸ்
 
ஷிவம் துபே 3, சமீர் ரிஸ்வி 1 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நம்பர் 4ல் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவுடன், மொயீன் அலி இணைந்தார். இருவரும் நிதானமாக ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர். 15 ஓவர்களில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது. அடுத்த 2 ஓவர்களில் 18 ரன்கள் எடுக்கப்பட்டு மொத்தமாக 123 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தான் 18ஆவது ஓவர் வீசுவதற்கு ரவி பிஷ்னோய் வந்தார். இதில், மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். 
 
தோனியின் மாஸ் அதிரடி
 
அதுவரையில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் கூட அடிக்காத மொயீன் அலி, பிஷ்னோய் ஓவரை வச்சு செய்து, அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஓவர் தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அடுத்து தோனி களமிறங்கினர். இதுவரையில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அடிக்காத ஒரு ஷாட்டை இந்தப் போட்டியில் அவர் அடித்தார். மோசின் கான் வீசிய 19ஆவது ஓவரில் நகர்ந்து வந்து ஸ்கூப் ஷாட்டில் விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலாக சிக்ஸருக்கு விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 2 வைடு, 4, 6, 1, 0, 1, வைடு, 0 என்று மொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டது.
 
தோனியின் 101 மீட்டர் சிக்சர்
 
கடைசி ஓவரை யாஷ் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் தோனி 3ஆவது பந்தில் சிக்ஸரும், 4ஆவது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் பவுண்டரியும் விளாசவே சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. இதில், தோனி 9 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி அடித்த சிக்ஸ் ஒன்று 101 மீட்டர் பறந்தது. இதே போன்று ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சேஸிங் ஆடியது.
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News