சென்னை அணியில் இணைந்த டெவோன் கான்வே! ஐபிஎல் 2024ல் புதிய திருப்பம்!

Devon Conway: காயம் காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே தற்போது சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Apr 23, 2024, 06:21 AM IST
  • சென்னை அணியில் இணைந்த கான்வே.
  • காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருந்தார்.
  • இருப்பினும் தற்போது அணியுடன் இணைந்துள்ளார்.
சென்னை அணியில் இணைந்த டெவோன் கான்வே! ஐபிஎல் 2024ல் புதிய திருப்பம்! title=

Devon Conway Latest News: நட்சத்திர நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகி உள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. ஐபிஎல் 2024ன் ஆரம்பகட்ட போட்டிகளில் கான்வே விளையாடமாட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ஓப்பனிங் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காயம் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் தொடரில் இருந்து கான்வே விலகுவதாக கூறப்பட்டது. அவருக்கு பதில் இங்கிலாந்தின் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  ஆனால், கான்வே தற்போது சென்னை அணியுடன் இணைந்துள்ளார்.

மேலும் படிக்க | IPL playoffs: இன்னும் ஆர்சிபி அணிக்கு பிளேஆப் செல்ல வாய்ப்புகள் உள்ளதா?

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் விளையாடவுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் கான்வே இருப்பது போன்ற புகைப்படத்தை சிஎஸ்கே அணி பகிர்ந்துள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினாலும் கையில் கட்டுடன் அணியுடன் சேர்ந்து இருப்பதற்காக கான்வே தற்போது வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.  இருப்பினும், அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.  

டெவான் கான்வே

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட கான்வே கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்கள் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார்.  இதுவரை 23 போட்டிகளில் விளையாடி 924 ரன்கள் குவித்துள்ளார். இதில் 9 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்ச 92* ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்துள்ளார். கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய வீரர்களில் ஒருவராக கான்வே இருந்தார்.  6 போட்டிகளில் விளையாடி 51 சராசரியுடன், 140 ஸ்ட்ரைக் ரேட்டில், 671 ரன்கள் அடித்து இருந்தார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பயிற்சிக்காகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு மறுவாழ்வுக்காகவும் கான்வே தற்போது சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. 
 
ஐபிஎல் 2024 போட்டியில் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் ரிச்சர்ட் க்ளீசன் இணைந்துள்ளார். க்ளீசன் 6 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 90 டி20களில் விளையாடி 101 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மே 1ம் தேதியுடன் பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசூர் ரகுமான் அவரது நாட்டிற்கு திரும்ப உள்ளதால் அதன் பிறகு க்ளீசன் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சின்ன பொல்லார்டை இன்னும் வெளியே உட்கார வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News