IND vs BAN: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு

பரபரப்பான சூழலில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று பெர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியல் மோதுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 2, 2019, 02:53 PM IST
IND vs BAN: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு title=

14:57 02-07-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 


பரபரப்பான சூழலில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று பெர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியல் மோதுகின்றன.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 2019-ன் 49-வது லீக் ஆட்டம் பெர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

அரை இறுதிக்கு முன்னேற தான் விளையாடவிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கும் வங்கதேதச அணி., இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது. அதே வேலையில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் போது அரையிறுதி போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற முனைப்பில் இந்தியா இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் மொத்தம் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இந்தியா, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 2-வது அணியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

தொடர் வெற்றியை பதிவு செய்து வந்த இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதற்கு நடுவரிசையில் களமிறங்கிய தோனி - கேதர் ஜாதவின் மந்தமான ஆட்டமே காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தியா வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்த போதும், ரோஹித் சர்மா, கோலி, ஹர்திக் பாண்டியா மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர். பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி அசத்தி வருகின்றனர். ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களான சஹால், குல்தீப் விக்கெட் எடுக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, இன்றைய போட்டியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச அணியை பொறுத்தவரை ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளார். மேலும், தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹ்மான் பக்கபலமாக விளங்குகின்றனர். இருப்பினும், பந்துவீச்சில் சைபுதீன், முஸ்தபிஜுர் ரஹ்மான் மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர். கேப்டன் மோர்தசா பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவர்கள், கைகொடுக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு சவால் காத்திருக்கிறது.

Trending News