தினேஷ் கார்த்திக் மேற்கிந்திய தீவு சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு!!

மேற்கிந்திய தீவு சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக்!!

Last Updated : Sep 8, 2019, 03:54 PM IST
தினேஷ் கார்த்திக் மேற்கிந்திய தீவு சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு!! title=

மேற்கிந்திய தீவு சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக்!!

வியாழக்கிழமை நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் 2019-ன் தொடக்க ஆட்டத்தின் போது டிரிபாகோ நைட் ரைடர்ஸ் டிரஸ்ஸிங் அறையில் கார்த்திக் காணப்பட்டார். BCCI வீரர் ஒப்பந்தத்தின்படி, குழுவின் முன் அனுமதியின்றி வீரர்கள் வேறு எந்த விளையாட்டு நடவடிக்கை அல்லது விளையாட்டிலும் பங்கேற்கவோ அல்லது கலந்துகொள்ளவோ ​​அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் BCCI அனுமதி இன்றி கரீபியன் பிரீமியர் லீக் 2019 தொடர் நடவடிக்கைகளில் காணப்பட்ட கார்த்திக்கிற்கு BCCI தங்கள் அனுமதி இல்லாமல் தினேஷ் கார்த்திக் வேறு ஒரு நாட்டின் டி20 தொடரின் போது, ஒரு அணியின் உடை மாற்றும் அறையில் இருந்தது தவறு. இது வீரர்கள் ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று கூறி BCCI தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி கையெழுத்திட்ட நோட்டீஸ் அனுப்பியது.

இதற்க்கு கடிதம் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் தினேஷ் கார்த்திக். அந்த கடிதத்தில், மெக்குல்லம் அழைப்பின் பேரில் தான் அங்கே சென்றதாகவும், டரின்பாகோ அணிக்காக போட்டியிலும், வேறு எந்த வகையிலும் தான் பங்களிக்கவில்லை என கூறி இருக்கிறார்.

மேலும், BCCI அனுமதி இல்லாமல் அங்கே சென்றதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இனி வெஸ்ட் இண்டீஸ்-இல் இருக்கும் வரை அந்த அணியின் உடை மாற்றும் அறையில் தான் அமர மாட்டேன் என்றும் உறுதி அளித்து இருக்கிறார் தினேஷ் கார்த்திக். BCCI-ன் நிர்வாக கமிட்டி, தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு அவரை இந்த விவகாரத்தில் அவரை விடுவிக்கும் என கூறப்படுகிறது. தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News