சிஎஸ்கேவுக்கு மீண்டும் தலைவலி... கேகேஆர் போட்டியிலும் இவர்கள் கிடையாது - அப்போ என்ன பிளான்?

CSK vs KKR Latest News: ஐபிஎல் தொடரில் (IPL 2024) கொல்கத்தா அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பௌலர்கள் இருவரும் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 7, 2024, 10:34 PM IST
  • சென்னை அணி சேப்பாக்கத்தில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது.
  • சேப்பாக்கத்தில் வெளியே 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
  • ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க சிஎஸ்கே போராடும்.
சிஎஸ்கேவுக்கு மீண்டும் தலைவலி... கேகேஆர் போட்டியிலும் இவர்கள் கிடையாது - அப்போ என்ன பிளான்? title=

CSK vs KKR Latest News: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. மாலையில் நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. 

குறைந்தபட்சம் அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகளை விளையாடிவிட்டன. ஆர்சிபி மற்றும் டெல்லி அணி மட்டுமே 5 போட்டிகளை விளையாடி உள்ளன. அந்த அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள கொல்கத்தா அணியுடன், சிஎஸ்கே அணி நாளை சேப்பாக்கத்தில் மோத உள்ளது. 

பலமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

குறிப்பாக, சிஎஸ்கே அணி (Chennai Super Kings) தற்போது 3ஆவது இடத்தில் உள்ளது. இன்று லக்னோ - குஜராத் போட்டியில் யார் வென்றாலும் சிஎஸ்கே அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்படும். சேப்பாக்கத்தில் இரண்டு போட்டிகளையும் சிஎஸ்கே வென்ற நிலையில், விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் தோல்வியடைந்தது. எனவே, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க சிஎஸ்கே போராடும். ஆனால், மறுபுறம் ஹாட்ரிக் வெற்றியுடன் கேகேஆர் (Kolkatta Knight Riders) பலமாக காணப்படுகிறது.

மேலும் படிக்க | 20வது ஓவரில் அதிக ரன்களை அடித்தவர் யார் தெரியுமா? ரொமாரியோ ஷெப்பர்டுக்கே 2வது இடம்தான்!

பவர்பிளே மற்றும் இறுதிகட்ட ஓவர்களில் அதிரடி பேட்டிங்கை விளையாட சுனில் நரைன், ஃபில் சால்ட், ரஸ்ஸல், ரின்கு சிங், ரமன்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். மிடில் ஆர்டரில் தற்போது அங்கிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் உள்ளனர். பந்துவீச்சை பார்த்தோமானால் சுனில் நரைனுடன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, மிட்செல் ஸ்டார்க் என அதிரடி பந்துவீச்சு லைன்அப்பும் உள்ளது. 

இருவரும் கிடையாது...

எனவே, சிஎஸ்கே தனது கோட்டையான சேப்பாக்கத்தில் எப்படி கொல்கத்தாவை வீழ்த்தப் போகிறது என்பதை காண பலரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மேலும், கடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரானா ஆகிய இருவருமே இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதில் மொயின் அலி மற்றும் தீக்ஷனா ஆகியோர் இடம்பெற்றனர். சமீர் ரிஸ்விக்கு பதில் பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி இடம்பெற்றார். 

இந்நிலையில், நாளைய போட்டியிலும் முஸ்தபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) மற்றும் பதிரானா (Pathirana) ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகரான எரிக் சைமன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னெச்சரிக்கை காரணமாகவே அவரை கடந்த போட்டியில் விளையாடவைக்கவில்லை என்றார். இருப்பினும், மேலும் கூறுகையில்,"பதிரானா கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது பிசியோவின் முடிவை பொறுத்ததுதான். இது ஒரு நீண்ட தொடராகும். 

எரிக் சைமன்ஸ் நம்பிக்கை

அவர் விளையாடுவது குறித்து நாங்கள் கவனமுடன் முடிவெடுப்போம். அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது பிஸியோவிற்கே வெளிச்சம். ஒரு போட்டிக்காக நாங்கள் போட்டிகளில் அவரை இழந்துவிட முடியாது அல்லவா, இருப்பினும் அவர் நன்றாக தேர்ச்சியடைந்து வருகிறார்" என்றார். இன்று வலைப்பயிற்சியில் பதிரானா சில பந்துகளை வீசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்தபிசுர் ரஹ்மான் நாடு நாளையே போட்டியில் விளையாடுவார் என்பதும் சரியாக தெரியவில்லை. 

மேலும் முகேஷ் சௌத்ரியை (Mukesh Chowry) நாங்கள் தொடர்ந்து விளையாட வைப்போம் என எரிக் சைமன் கூறியிருக்கிறார். இதன்மூலம், சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய அதே காம்பினேஷனையே தொடரும் (CSK Playing XI) என தெரிகிறது. சமீர் ரிஸ்விக்கு இம்முறையும் வாய்ப்பு கிடைப்பது குறைவுதான்.

மேலும் படிக்க | மும்பை அணிக்கு முதல் வெற்றி... அந்த ஒரே ஒரு ஓவர் - நோர்க்கியாவால் தோற்றது டெல்லி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News