இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிசிசிஐ! ஏன் தெரியுமா?

இந்திய அணியின் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும், அதனை புறக்கணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ எச்சரித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 17, 2024, 12:14 PM IST
  • உள்நாட்டு கிரிக்கெட் புறக்கணிக்கும் வீரர்கள்.
  • ஐபிஎல் போட்டியில் கவனம் செலுத்துகின்றனர்.
  • பிசிசிஐ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிசிசிஐ! ஏன் தெரியுமா? title=

உள்நாட்டு கிரிக்கெட் விளையாடாமல் தவிர்த்து வந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எச்சரித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மெயில் மூலம் சில தகவல்களை பகிர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  அதில், இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று, இதனை தவிர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.  உள்நாட்டு கிரிக்கெட்டை விட சில வீரர்கள் ஐபிஎல்-க்கு முன்னுரிமை அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஜடேஜா செய்த டாப் கிளாஸ் சாதனைகள்... கபில்தேவ், அஸ்வின் பட்டியலில் சேர்ந்த ஜட்டு..!

"தற்போது வீரர்கள் இடையில் உள்ள போக்கு பிசிசிஐக்கு கவலைக்குரியது. சில வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை விட ஐபிஎல்க்கு அதிக முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளனர், இது யாரும் எதிர்பார்க்கப்படாத ஒரு மாற்றமாக உள்ளது.  ரஞ்சி கோப்பை இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக உள்ளது.  மேலும் இந்திய அணியில் தேர்வு ஆவதற்கு உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி இருப்பது மிகவும் முக்கியம். உள்நாட்டு கிரிக்கெட் இந்திய அணி வீரர்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.  இந்திய கிரிக்கெட்டுக்கான எங்கள் பார்வை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக உள்ளது. இந்தியாவுக்காக விளையாட விரும்பும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தங்களை நிரூபிக்க வேண்டும். 

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் செயல்திறன் தேர்வுக்கான முக்கியமான அளவுகோலாக உள்ளது மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்காத வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று பிசிசிஐ செயலாளர் கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டி ஒரே இரவில் ஒருவரின் வாழ்க்கையை மாற்றினாலும், வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு படிக்கட்டாக அதனை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் உட்பட சில வீரர்கள், ஐபிஎல் போட்டியில் விளையாட தங்களை தயார்படுத்தி கொள்வதற்காக ரஞ்சி கோப்பை போட்டிகளை தவிர்ப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இஷான் கிஷனை போல ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரும் சமீபத்தில் தொடங்கிய ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்கவில்லை.  உள்நாட்டுப் போட்டிகளில் தங்கள் மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை சீனியர் வீரர்கள் எப்படி பயன்படுத்தி கொண்டார்கள் என்பதையும் ஜெய்ஷா மேற்கோள் காட்டி உள்ளார். “சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடின போதிலும், ஓய்வு நேரத்தில் உள்நாட்டு கிரிக்கெட் ஆடினர். அதனால் தான் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | துருவ் ஜூரல்: கார்கில் வீரரின் மகன், அம்மா நகைகளை அடகு வைத்து கிரிக்கெட் கிட் வாங்கிய இளைஞர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News