IPL 2024: சிஎஸ்கே அணியின் மற்றொரு முக்கிய வீரரும் காயம் - ஐபிஎல் விளையாடுவது சந்தேகம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான டெவோன் கான்வே கட்டை விரல் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 24, 2024, 06:21 PM IST
  • டெவோன் கான்வேவுக்கு இடது கட்டைவிரலில் காயம்
  • ஸ்கேன் எடுத்ததில் எலும்பு முறிவு இருப்பது உறுதி
  • சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் விளையாடுவது சந்தேகம்
IPL 2024: சிஎஸ்கே அணியின் மற்றொரு முக்கிய வீரரும் காயம் - ஐபிஎல் விளையாடுவது சந்தேகம்? title=

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாகவே நாள்கள் இருக்கும் நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் 3 பேர் இப்போது காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.

ஏற்கனவே, சிவம் துபே காயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார். அவர் ரஞ்சி போட்டியில் விளையாடியபோது ஏற்பட்ட காயத்தில் எஞ்சிய ரஞ்சி சீசன் விளையாடுவதில் இருந்தே விலகியுள்ளார். இப்போது துபே மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும் ஐபிஎல் போட்டிக்குள் முழு உடல் தகுதியை எட்டுவிடுவாரா? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா முழங்கால் வலி காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடவில்லை. 

இப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான டெவோன் கான்வேவும் காயத்தில் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டி விளையாடும்போது அவருக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. நியூசிலாந்து அணியின் பிசியோதெரபிஸ்டுகள் களத்திற்கு உடனடியாக சென்று டெவோன் கான்வேவை பரிசோதித்து வெளியே அழைத்து வந்தனர். காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் உடனடியாக எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்கப்பட்டார். 

மேலும் படிக்க | இந்திய அணியில் கலக்கும் அண்ணன்... ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்த தம்பி - யாரு தெரியுமா?

இதனையடுத்து எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில் டெவோன் கான்வேவுக்கு கட்டை விரல் முறிவு இருப்பது உறுதியானது. இதனால் அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் எவ்வளவு நாள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இப்போது காயமடைந்திருக்கும் மூன்று வீரர்களை தவிர டேரி மிட்செல், முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோர் ஏற்கனவே காயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தான். 

கேப்டன் எம்எஸ் தோனியின் அபிமானத்தை பெற்றிருக்கும் இவர்கள் இப்போது காயமடைந்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு முழு உடல்தகுதியை எட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே இருக்கிறது. 

ஐபிஎல் 2024க்கான சிஎஸ்கேயின் முழு அணி: 

எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், மொயின் அலி, சிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, ரச்சின் ரவீந்திரா (1.8 கோடி), ஷர்துல் தாக்கூர் (4 கோடி), டேரில் மிட்செல் (14 கோடி), சமீர் ரிஸ்வி (8.4 கோடி), முஸ்தபிசுர் ரஹ்மான் (2 கோடி), அவனிஷ் ராவ் ஆரவெல்லி (20 லட்சம்).

மேலும் படிக்க | REFEX குழுமம் வழங்கும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட்டின் தொடக்கவிழா! எங்கே எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News