இனி இந்திய அணியில் இடமில்லை - ஓய்வை அறிவிக்கப்போகும் 3 வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியில் இனி விளையாடும் வாய்ப்பு இல்லை என்பதால், 3 வீரர்கள் விரைவில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2023, 06:58 PM IST
  • 3 வீரர்கள் ஓய்வுபெற வாய்ப்பு
  • தினேஷ் கார்த்திக்கிற்கு இனி இடமில்லை
  • இஷாந்த் சர்மா ஓய்வு அறிவிக்கலாம்
இனி இந்திய அணியில் இடமில்லை - ஓய்வை அறிவிக்கப்போகும் 3 வீரர்கள் title=

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவலும் உள்ளது. இந்திய அணியில் விளையாடிய மணீஷ் திவாரி அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், இன்னும் 3 வீரர்கள் விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஓய்வு பெறும் 3 வீரர்கள் யார்?

இந்திய அணியில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் பட்டியலில் இருந்த தினேஷ் கார்த்திக் ஓய்வு முடிவை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரிலும் இந்த முறை சோபிக்காததால் அவர் பெயர் எந்த தொடருக்கும் பரிசீலிக்கப்படவில்லை. மாறாக இளம் வீரர்களின் பெயர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்பதால், தினேஷ் கார்த்திக்கின் ஓய்வு முடிவு அறிவிப்பு எப்போது என்பது மட்டுமே இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

மேலும் படிக்க | IND vs PAK: உலகக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மாற்றம்?

தினேஷ் கார்த்திக் ரெக்கார்டு

சென்னையில் வசிக்கும் தினேஷ் கார்த்திக், இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 38 வயதான கார்த்திக், சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்டில் ஒரு சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 9 அரை சதங்களுடன் 1752 ரன்கள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் 686 ரன்கள் எடுத்துள்ளார்.

இஷாந்த் சர்மா

மூத்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இஷாந்த் ஷர்மா இந்திய அணிக்கு திரும்புவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC Final-2023) இறுதிப் போட்டிக்கு கூட அவரால் செல்ல முடியவில்லை. இஷாந்த் டெஸ்ட் வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. 34 வயதான இஷாந்த் இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, 80 ஒருநாள் போட்டிகளில் 115 விக்கெட்டுகளையும், 14 டி20 சர்வதேசப் போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கேதர் ஜாதவ்

கேதர் ஜாதவ் பெயரும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தனது வாழ்க்கையில் 73 ஒருநாள் மற்றும் 9 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனியின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடி வந்தார். இதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் தலைமையில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 6 அரை சதங்களின் உதவியுடன் 1389 ரன்களைச் எடுத்துள்ளார். அதே நேரத்தில் டி20 சர்வதேச வடிவத்தில் ஒரு அரை சதத்துடன் 122 ரன்கள் சேர்த்தார். 2020 ஆம் ஆண்டில், கேதார் கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார்.

மேலும் படிக்க | இஷான் கிஷனின் மூன்றாவது அரைசதம், அவரை தோனியின் சாதனையை தொட வைத்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News