Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்..!

Weekly Horoscope: மார்ச் மாதம் இரண்டாவது வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியன் மார்ச் மாதம் 14ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், பங்குனி மாதம் என்னும் மீன மாதம் பிறக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 10, 2024, 12:05 PM IST
Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு சூப்பர்... சிலருக்கு சுமார்..! title=

Weekly Horoscope: மார்ச் மாதம் இரண்டாவது வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியன் மார்ச் மாதம் 14ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், பங்குனி மாதம் என்னும் மீன மாதம் பிறக்கிறது. சூரிய பெயர்ச்சியுடன் கூடவே, செவ்வாய் மார்ச் மாதம் 15 ஆம் தேதி, கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். சனிபகவான் கும்ப ராசியில் வீற்றிருக்கும் நிலையில், சூரியனும் செவ்வாயும் இணைகின்றனர். மார்ச் மாதம் இரண்டாவது வாரம், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு, மிகவும் பலனளிப்பதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி: இந்த வார ராசிபலன்

மேஷ ராசியினருக்கு, இந்த வாரம் வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் வாரமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு, மனதிற்கு பிடித்த இடத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படலாம். எனவே கவனமாக இருக்கவும். மற்றபடி பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது.

ரிஷப ராசி: இந்த வார ராசிபலன்

ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக இருக்கும். பேச்சுக்களில் கவனம் தேவை. இல்லை என்றால் சச்சரவுகள் ஏற்படலாம். அனாவசிய சந்தேகங்களால், அதிகரிக்கும். பணியிடத்திலும், உங்கள் வேலை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுக்கு தெரியாத விஷயம் குறித்து, அனாவசியமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்: இந்த வார ராசிபலன்

மிதுன ராசியினருக்கு இந்த வாரம் சுமாரான வாரமாகவே இருக்கும். மன அமைதிக்கு தியானங்கள் செய்வது நல்லது. உங்கள் உள் உணர்வுகளை நம்புங்கள். உங்களுக்கு தெரியவரும் சில ரகசியங்களால் உங்கள் மன அமைதி பாதிக்கப்படலாம். அதிகம் யோசிக்காமல், நடப்பது நடக்கட்டும் என்று உங்கள் வேலையை நிதானமாக பாருங்கள்.

கடகம்: இந்த வார ராசிபலன்

கடக ராசியினருக்கு, இந்த வாரம் மகிழ்ச்சியை கொடுக்கும் வாரமாக இருக்கும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட கால சிக்கல் தீர்ந்து மனதிற்கு நிம்மதி பிறக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால், கடந்த காலத்தை நினைவு கூர்ந்து, மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

சிம்மம்: இந்த வார ராசிபலன்

சிம்ம ராசியினர் இந்த வாரத்தில் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முயலுவார்கள். குறிக்கோளை நிறைவேற்ற பிறர் உதவியை நாடுவது பலனளிக்கும். புதிய யோசனைகளை அமல்படுத்துவதில் ஆர்வம் இருக்கும். மனம் விட்டு பேசுவதால் பல விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் மாசி அமாவாசை... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்

கன்னி: இந்த வார ராசிபலன்

கன்னி ராசியினர் இந்த வாரத்தில் சகிப்புத் தன்மையை கடைப்பிடிப்பதால், பலவிதமான பாதிப்புகளில் இருந்து வெளிப்படுவீர்கள். வேலையில் ஏற்படும் தாமதம் உங்கள் பொறுமையை சோதிக்கலாம். ஆனால் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும்.

துலாம்: இந்த வார ராசிபலன்

துலாம் ராசியினர் இந்த வாரம் செலவுகளை குறைத்து, கட்டுப்பாடுடன் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த கால தவறுகளை பாடங்களாக எடுத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. தொழில் முன்னேற்றங்களில் கவனம் செலுத்துவது பயனளிக்கும். உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதால் பல உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

விருச்சிகம்: இந்த வார ராசிபலன்

விருச்சிக ராசியினர் உங்கள் திறமையை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ப உங்கள் வாழ்க்கை பாதையை மாற்றிக் கொள்ளவும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நலம் விரும்பிகள் கூறும் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு செயல்படுவது வாழ்க்கையில் முன்னேற உதவும். ஆன்மீகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு: இந்த வார ராசிபலன்

தனுசு ராசிகள் இந்த வாரம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். செலவுகள் அதிகரித்து, பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படலாம். ஆனால் நேரம் சரியாகும் என்று நம்பிக்கை வேண்டும். அதனால் மன உளைச்சலில் தவிக்காமல் எதிர்காலத்தை திட்டமிட்டால், கை மேல் பலன் உண்டு.

மகரம்: இந்த வார ராசிபலன்

மகர ராசியினருக்கு இந்த வாரம் கவன சிதறல் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகலாம். முன்னேற்றம் தடைபடுவதால் ஏற்படும் விரக்தி மனநிலை கோபத்தை தூண்டலாம். ஆனால் கோபத்தை கட்டுப்படுத்தி ஆக்கபூர்வமாக செயல்படுவது பலனளிக்கும். தியானம் யோகா மூலம் மனநிலையை கட்டுப்படுத்தி, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

கும்பம்: இந்த வார ராசிபலன்

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் மன மகிழ்ச்சியை கொடுக்கும் வாரமாக இருக்கும். வேலையில் கிடைக்கும் நற்பெயர் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கூடுதல் பொறுப்புகள் மற்றும் அங்கீகாரங்கள் கிடைப்பதால், மனதில் திருப்தி உணர்வு ஏற்படும். நிதி நிலையில் சிறப்பாக இருக்கும். எனினும் உடல் ஆரோக்கியம் மீது கவனம் செலுத்தவும்.

மீனம்: இந்த வார ராசிபலன்

மீன ராசியினர் இந்த வாரம், நீண்ட கால இலக்குகளை கருத்தில் கொண்டு, செயல்படுவது பலனளிக்கும். உங்கள் நலம் விரும்பியின் வழிகாட்டுதலை கடைபிடிப்பதால், இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நன்கொடை மற்றும் தன்னார்வ பணிகள் மூலம் மனதிற்கு திருப்தி கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடுத்த வாரம் பண மழை பொழியும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News