குருவால் அதிர்ஷ்ட குபேர மழை.. பண மழையில் குளிக்கப்போகும் 3 ராசிகள்

guru vakri effects jupiter transit: ஜோதிடத்தில் தேவகுரு பிருஹஸ்பதிக்கு தனி இடம் உண்டு. இந்த நேரத்தில் தேவகுரு வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். செப்டம்பர் 4 ஆம் தேதி, வியாழன் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 19, 2023, 10:52 AM IST
  • பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
குருவால் அதிர்ஷ்ட குபேர மழை.. பண மழையில் குளிக்கப்போகும் 3 ராசிகள் title=

குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2023: ஜோதிடத்தில் குரு பகவான் பிருஹஸ்பதிக்கு தனி இடம் உண்டு. தேவகுரு பிரகஸ்பதியின் அருளால் ஒருவரின் அதிர்ஷ்டம் நிச்சயம் பிரகாசிக்கும் என்பது ஐதீகம். தேவகுரு வியாழன், அறிவு, ஆசிரியர், குழந்தை, மூத்த சகோதரர், கல்வி, மதப் பணி, புனித இடம், செல்வம், தொண்டு, நல்லொழுக்கம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். 27 நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களுக்கு அதிபதி வியாழன் ஆவார். இந்த நேரத்தில் குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி, வியாழன் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப்போகிறது, அதவாது பின்னோக்கி பயணிக்க உள்ளார். குரு பகவான் வியாழன் பின்னோக்கி செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். எனவே குருவின் வக்ர பெயர்ச்சி காரணத்தால் (Jupiter Retrograde In Aries) எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோக பலன், வெற்றி உண்டாகும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேஷ ராசியில் குரு பெயர்ச்சி: இந்து மதத்தில், குரு கிரகம் மிகப்பெரிய கிரகமாக கருதப்படுகிறது. இது மட்டுமின்றி வியாழன் கிரகம் ஒன்றரை வருடத்தில் தனது ராசியை மாற்றி, இந்த வருடம் மார்ச் மாதம் மேஷ ராசியில் பெயர்ச்சியானார். வரும் 2024ம் ஆண்டு வரை இந்த ராசியில் இருக்கும். இதனிடையே குரு வக்ர பெயர்ச்சி (Guru Vakri 2023) அடைந்து..டிசம்பரில் வக்ர நிவர்த்தி அடைவார். எனவே இந்த வக்ர காலத்தில் குருவால் எந்த ராசிக்காரர்களுக்கு அளவில்லா பலன் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்துக்கோலவோம்.

மேலும் படிக்க | தொட்டதெல்லாம் வெற்றி: செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை

மேஷ ராசி - Aries Zodiac Sign
பணியிடத்தில் வெற்றி கிடைக்கும்.
கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இம்முறை ஒரு வரப்பிரசாதமாக அமையும். 
பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
உங்கள் பணி பாராட்டப்படும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள்.
மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.

மிதுன ராசி - Gemini Zodiac Sign
கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்ற நேரம்.
இந்த நேரத்தில் முதலீடு செய்வது நன்மை தரும்.
பண லாபம் இருக்கும், அதன் காரணமாக பொருளாதார பக்கம் வலுவடையும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
வேலை மற்றும் வணிகத்திற்கு நேரமாக இந்த காலக்கட்டத்தில் அமையும். 
மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும் வாய்ப்புகள் உள்ளன.
துறையில் உயர் அதிகாரிகளுடனான உறவு இனிமையாக இருக்கும்.
உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள்.

தனுசு ராசி - Sagittarius Zodiac Sign
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும்.
அரசு வேலை தேடுபவர்களுக்கும் நல்ல நேரம்.
இதன் போது, ​​பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
பணியிடத்தில் உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராசிபலன் ஆகஸ்ட் 19, 2023: அதிர்ஷ்டமான நாள்... இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News