சூரிய பெயர்ச்சி... வைகாசியில் ‘இந்த’ ராசிகளுக்கு தனயோகம்... அமோக வாழ்க்கை!

Suriya Peyarchi Palangal: சூரியன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையும் நிலையில், மிதுனம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு வைகாசி மாதம் மிக சிறப்பான மாதமாக அமையும் என சில ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 30, 2024, 03:58 PM IST
  • சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் எவை.
  • வைகாசி மாத ராசிபலன்.
  • சூரியபகவான் சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் பிரவேசிக்க உள்ளார்.
சூரிய பெயர்ச்சி... வைகாசியில் ‘இந்த’ ராசிகளுக்கு தனயோகம்... அமோக வாழ்க்கை! title=

Suriya Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மே மாதம் சூரிய பகவான் ரிஷப ராசியில் பிரவேசிக்கப் போகிறார். தற்போது, ​​சூரியன் செவ்வாய், மேஷ ராசியில் உள்ளது. இந்நிலையில் மே மாதம் சூரியபகவான் சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் பிரவேசிக்க உள்ளார். சில ராசிக்காரர்கள் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் பெரும் பலன்களைப் பெறலாம். சூரியன் மே 14, 2024 செவ்வாய் அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சஞ்சரிக்கிறார். ஜூன் 14 வரை சூரியன் ரிஷப ராசியில் இருப்பார். சூரியனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் 3 ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக மாறுவார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

மேஷம்: வைகாசி மாத பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. நம்பிக்கையுடன் இருப்பார்கள். உங்கள் முழு கவனமும் உங்கள் வேலையில் இருக்கும். உங்கள் திறமையான பணிக்காகவும் பாராட்டப்படுவீர்கள். நீதிமன்ற வழக்குகள்மேதேனும் இருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். முதலீடுகள் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். கனிவான பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். பயணங்கள் சாதகமாக அமையும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதே நேரத்தில், இந்த நேரத்தில் உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது நல்லது.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு வாழ்க்கையில் இனி கொண்டாட்டம் தான்..!

சிம்மம்: வைகாசி மாத பலன்கள்

சூரிய பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். உங்கள் தந்தை மற்றும் குருவின் முழு ஆதரவைப் பெறப் போகிறீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழல் உண்டாகும். ஆன்மீக காரியங்களிலும் ஆர்வம் காட்டுவார்கள். அதே சமயம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது.

கும்பம்: வைகாசி மாத பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக அமையும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். உங்கள் திறமையால் எல்லா சிரமங்களையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நெருக்கடியாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மாணவர்களுக்கு நல்ல நாள் என்று கருதப்படுகிறது. தொழில் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சுக்கிரன் அஸ்தமனம்... நெருக்கடிகளை சந்திக்கும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News