மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க பண வரவு, லாபம்

Sukran Peyarchi Palangal: செவாய் மற்றும் சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 17, 2024, 12:44 PM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
  • பண வரவு அதிகமாகும்.
  • இதனால் பொருளாதார நிலை மேம்படும்.
மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க பண வரவு, லாபம் title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் மட்டுமின்றி கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. 

சில சமயங்களில் கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும்போது ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் நடப்பதுண்டு. இப்படிப்பட்ட சேர்க்கைகளால் ராஜயோகங்கள் உருவாகின்றன. ஏப்ரல் 23-ம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றி பெயர்ச்சியாகவுள்ளார். ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவில் சுக்கிரன் தனது ராசியை மாற்றவுள்ளார். செவ்வாய் மீன ராசியிலும் சுக்கிரன் மேஷ ராசியிலும் பெயர்ச்சி அடைவார்கள். செவாய் மற்றும் சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது கனவுகள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

சுக்கிரன் பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் உயர்வு இருக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது அமையும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். 

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நடக்காமல் தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். உங்கள் வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும். செல்வம் பெருகவும் வாய்ப்புகள் உள்ளன. வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். 

கன்னி (Virgo)

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் (Libra)

பண வரவு அதிகமாகும், செலவுகள் குறையும். இதனால் பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகளும் உள்ளன. பதவி உயர்வும் கைகூடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இந்த காலத்தில் கிடைக்கும். சில நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு அரச வாழ்க்கை, பணம், புகழ், அதிர்ஷ்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News