மேஷத்தில் புதன் பெயர்ச்சி... வைகாசியில் பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்!

Mercury transit in Aries & LUCKY Zodiacs: மேஷ ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிகளின், வேலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 7, 2024, 02:31 PM IST
  • புதன் பெயர்ச்சியால் சில ராசிகள் வாழ்க்கையில் புதிய உச்சத்தைத் தொடுவார்கள்.
  • புதன் பெயர்ச்சி மே 10 மாலை 06:39 மணிக்கு நிகழும்.
  • வேலை, தொழில், படிப்பு என அனைத்திலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
மேஷத்தில் புதன் பெயர்ச்சி...  வைகாசியில் பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்! title=

Mercury transit in Aries & LUCKY Zodiacs: ஜோதிடத்தில், புதன் புத்தி, விவேகம் மற்றும் அறிவின் காரக கிரகமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் வலுவாக உள்ளவர்கள், வேலை, தொழில், படிப்பு என அனைத்திலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். அதே நேரத்தில், புதன் வலுவாக இல்லை என்றால், அந்த நபர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு சிறிய விஷயத்தைப் பெறுவதற்கு கூட போராட வேண்டியிருக்கும். இந்நிலையில், மே 10, 2024 அன்று புதன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இந்த புதன் பெயர்ச்சி மே 10 மாலை 06:39 மணிக்கு நிகழும். 

மேஷ ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் சிம்மம், துலாம் உள்ளிட்ட சில ராசிகளின், வேலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி ஆவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய உச்சத்தைத் தொடுவார்கள் (Lucky Zodiacs) என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி: புதன் பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசியில் தான் புதன் பெயர்ச்சியாக உள்ள நிலையில், குறிப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும். வேலையில், தொழிலில், வியாபாரத்தில் பல புதிய வாய்ப்புகள் வரலாம். பணிகளில் கவனம் செலுத்தினால், இந்த நேரத்தில் நீங்கள் பல சலுகைகளையும் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலைக்கு முயற்சி செய்தால், அவர்களின் புதிய முயற்சிகள் பலனளிக்கும். மனதிற்கு பிடித்த புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சில செலவுகள் கூடுதலாக ஏற்படக்கூடும், ஆனால் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், இந்த செலவையும் சமாளிக்க முடியும்.

மிதுன ராசி: புதன் பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசியினருக்கு புதன் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். நிலுவையில் உள்ள வேலையை முடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக தொழில் துறையில் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் நிதி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். இது உங்கள் தொழிலுக்கு ஸ்திரத்தன்மையை வழங்கும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், இந்த நேரம் சாதகமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைத்து உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் படிக்க | சனி ஜெயந்தி... பாடாய் படுத்தும் ஏழரை சனியிடம் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்!

சிம்ம ராசி: புதன் பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களும் மேஷ ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் நன்மை உண்டாகும். உங்கள் கடின உழைப்புக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வெற்றிக்கான மகத்தான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிதி நிலைமையை பொறுத்தவரை, வாழ்க்கையில் வருமானம் நன்றாக இருக்கும். நீங்கள் பல வருமான ஆதாரங்களையும் கண்டறிவீர்கள். சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் கடந்த சில காலமாக இருந்து வந்த நிதி நெருக்கடிகள் நீங்கும். நிதி ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் உண்டாகும். அதை நீங்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை பாராட்டப்படும்.

துலாம் ராசி: புதன் பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மன அமைதியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். நிதி வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். இதனால் உங்களைச் சுற்றியுள்ள பல புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் நீங்கள் கவனம் செலுத்த முடியும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் வேலையில், தொழிலில், வியாபாரத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தால், இந்த நேரத்தில் அந்த பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் நீங்கும்.

மகர ராசி: புதன் பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசியில் புதன் நுழைவது மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். லாபம் ஈட்ட பல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பளமும் கூடும். குறிப்பாக பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். செயல் திறனைன் அடிப்படையில்,  நீங்கள் பல சலுகைகளைப் பெறலாம். நிதி வாழ்க்கையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்பதை நிரூபிக்கும் வகையில் பணம் சம்பாதிக்க நீங்கள் எடுக்கும் எந்த ஒரு திட்டத்திலும் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பால் அனைத்து வேலைக்கான பலன்கள் திருப்திகரமாக இருக்கும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News