புதனின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட்

Budhan Vakra Peyarchi Palangal:  புதன் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2024, 03:50 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி சாதகமாக அமையும்.
  • இந்த காலத்தில் அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
  • பல பயணங்களை மெற்கொள்வீர்கள்.
புதனின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் title=

Budhan Vakra Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிபப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். இவற்றில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தனித்துவம் உள்ளது. அந்த கிரகங்களில் மாற்றம் ஏற்படும்போது, மக்கள் வாழ்வில் அந்த தனித்துவமான அம்சங்களில் பல வித தாக்கங்கள் ஏற்படுகின்றன. 

கிரகங்களின் இளவரசரான புதன், நேற்று அதாவது ஏப்ரல் 25 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். புதன் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் பொற்காலம் பிறக்கும். அனைத்து விதமான மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

புதன் வக்ர நிவர்த்தியால் குபேர யோகம் பெறவுள்ள ராசிகள் இவைதான் 

ரிஷபம் (Taurus)

புதன் வக்ர நிவர்த்தி ரிஷப ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட அதிக நிதி ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இந்த காலத்தில் உங்கள் நம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளை இனி கையில பிடிக்க முடியாது..!!

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிவர்த்தி சாதகமாக அமையும். இந்த காலத்தில் அனைத்து பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பல பயணங்களை மெற்கொள்வீர்கள். இவற்றால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

கன்னி (Virgo):

உறவுகளுக்குள் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு, புதனின் இந்த மாற்றம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்களைப் பெறக்கூடும். நல்ல தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கைத் துணையுடன் உறவு மிகவும் நட்பாக இருக்கும், புரிதல் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மேலும் இந்த நேரத்தில் உங்கள் உடற்தகுதியிலும் கவனம் செலுத்த முடியும்.

கும்பம் (Aquarius)

புதன் வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் கும்ப ராசியினருக்கு சுப பலன்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். கிரகங்கள் சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வியாபாரம் விருத்தி அடையும். லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News