ஜனவரி 16: இன்றைய நாள் யாருக்கு அதிர்ஷ்டத்தை தரும் - தினசரி ராசிபலன்!

Daily Horoscope: மாட்டு பொங்கலான ஜனவரி 16ஆம் தேதி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்களுக்கான பலன்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 16, 2024, 06:18 AM IST
  • தை மாதம் இரண்டாம் நாள் இன்று.
  • மாட்டு பொங்கல் தமிழர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.
  • இன்று பலருக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
ஜனவரி 16: இன்றைய நாள் யாருக்கு அதிர்ஷ்டத்தை தரும் - தினசரி ராசிபலன்! title=

Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களாகிய உங்களுக்கு மாட்டு பொங்கலான ஜனவரி 16ஆம் தேதியான இன்று என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது சிறப்பானதாக அமையும் வாய்ப்பு அதிகம். இன்று உங்கள் ராசிக்கு வாய்ப்புகள் சாதகமாக இருக்குமா என்பதை இதில் காணலாம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பாக நாளாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது. அதிக செலவுகள் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் உங்கள் பட்ஜெட்டிலும் கவனம் செலுத்துங்கள். இன்றிரவு உங்கள் மனைவியுடன் நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. எனவே, அமைதியான மனநிலையில் இருக்க முயற்சியுங்கள்.

ரிஷபம்

ரிஷப் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஆசைகள் நிறைவேறலாம். ஆன்மீக காரியங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும், அதற்காக அதிக செலவும் வரலாம். உங்கள் தந்தையிடம் வாக்குவாதம் வர வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறவுகளில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க உடன்பிறந்தவர்களுடன் நீண்ட நேரம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வேலையில் இருக்கும் பெண் நண்பர் உங்களுக்கு பண பலன்களை தரலாம். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பணம், புகழ், பதவி அனைத்தும் கிடைக்கும்

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று லாபம் தரும் புதிய தொழில் திட்டங்களை தொடங்கி செயல்படுத்தலாம்.  வதந்திகள் மற்றும் எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். ஏதேனும் முரண்பாடுகளைத் தீர்க்க உங்கள் மனைவியை வெளியே அழைத்துச் செல்லலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வேலை சற்று சவாலானதாக இருக்கும். கடின உழைப்பால் சோர்வை எதிர்பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்களின் உடனடி ஒப்புதலுடன் திருமண வாய்ப்புகள் ஒரு ஊக்கத்தைப் பெறுகின்றன. 

கன்னி 

கன்னி ராசிக்கார மாணவர்கள் எதிர்பார்த்த சிறந்த ரிசல்டை பெறுவார்கள், அவர்களுக்கு இன்று கொண்டாட்டமான நாளாகும். இன்று கடன் வாங்குவதை தவிர்க்கவும். 

மேலும் படிக்க | உச்சமடைந்தார் சூரியன்.. பெயர்ச்சியால் எந்த ராசிக்கு பொற்காலம்? முழு ராசிபலன்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிர்மறை எண்ணங்களை நிறுத்துங்கள். இன்று மாலையில் உறவினர் மூலம் வரும் முக்கியத் தகவல்கள் உங்களுக்கு நன்மை தரும். இன்று நீங்கள் செய்யும் எந்த விஷயத்திலும் வெற்றியே கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வழக்கத்தை விட அதிக புத்திசாலித்தனத்துடன் செயல்படுவார்கள். உங்கள் பாதையில் உள்ள தடைகளை தகர்த்தெறிவீர்கள். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மனக்கசப்பை உண்டாக்கும். முன்னோக்கி நகர்ந்து அதை தடுத்து விடுங்கள்

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான பலன் தரும். ஆன்மீக மற்றும் சமூக நிகழ்வுகளில் செயலில் பங்கேற்பது உங்கள் நற்பெயரை அதிகரிக்கும். உறவினருக்கு பணம் ஏற்பாடு செய்ய வேண்டி வரலாம். 

மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பின் புதன்-குருவின் அபூர்வ நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு பொற்காலம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்களைத் தரும். உங்கள் துணையுடன், வெற்றிகரமான எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் இன்று முடிவுக்கு வரும். 

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று ஊக்கமில்லாமல் உணரலாம், ஆனால் அவற்றைக் கடக்க உங்கள் தந்தையை அணுகவும். இன்று மாலை அக்கம் பக்கத்தினருடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும். வேலை தேடுபவர்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பற்றிய தகவல்களைப் பெறலாம். உடன்பிறந்தவர்களுடன் பணிபுரிவது நன்மை தரும். 

மேலும் படிக்க | 3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, அட்டகாசமான பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News