புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் அற்புதமான காலம், செல்வம் கொழிக்கும்

Mercury Transit: புதன் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நள்ளிரவு 3:51 மணிக்கு ராசி மாறுகிறார். புதன் சஞ்சாரத்தால் எந்த ராசிகளுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2022, 11:36 AM IST
  • மேஷ ராசிக்கு ஐந்தாம் வீட்டில் புதன் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
  • போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் அற்புதமான காலம், செல்வம் கொழிக்கும் title=

கிரகங்களின் அதிபதியான புதன் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நள்ளிரவு 3:51 மணிக்கு ராசி மாறுகிறார். இந்த நேரத்தில் புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைவார். ஆகஸ்ட் 21 வரை சிம்ம ராசியில் தங்கி கன்னி ராசியில் பிரவேசிக்கும். பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் பல வித விளைவுகளை ஏற்படுத்தும். புதனின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் சஞ்சாரத்தால் எந்த ராசிகளுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்கு ஐந்தாம் வீட்டில் புதன் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு கூடும். மேஷ ராசிக்காரர்களுக்கு பயணம் செல்ல வாய்ப்புகள் ஏற்படும். இந்த பயணத்தால் சாதகமான விளைவுகள் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மேலும் படிக்க | அக்னி நீராடிய கடலில் அமாவாசை நாளன்று நீராடுவோரின் பாவங்கள் தீரும்: அன்னை சீதையின் ஆசி

கடகம்:

உங்கள் ராசியிலிருந்து இரண்டாவது வீட்டில் புதன் சஞ்சரிப்பது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இந்த வேளையில் உங்கள் பேச்சாற்றல் மேம்படும். வருமானத்தைப் பெருக்கும் வழிகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும். வேலை தேடும் மாணவர்களுக்கு இந்த காலம் வரப்பிரசாதமாக அமையும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும். மேல் அதிகாரிகள் உதவுவார்கள்.

துலாம்:

துலா ராசியிலிருந்து பதினொன்றாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் இந்தக் காலகட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதனின் செல்வாக்கால் உங்கள் தொழிலில் முன்னேற்றம் காணலாம். உங்கள் பணி பாராட்டப்படும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் விலகும். கடினமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்கு ஏழாவது வீட்டில் புதன் பெயர்ச்சியாக உள்ளதால் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறலாம். இருப்பினும் நீங்கள் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இது வியாபாரிகளுக்கு நல்ல நேரமாக இருக்கும். அரசு வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதங்கள் வரப்பிரசாதமாக இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News