புதன் வக்ர பெயர்ச்சி: சிலருக்கு சூப்பர், சிலருக்கு சுமார், முழு ராசிபலன் இதோ

Mercury Retrograde: அலர்ட் மக்களே!! வக்ரமாகிறார் புதன்!! புதனின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 9, 2022, 05:48 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் காணப்படும்.
  • பொருளாதார நிலை மேம்படும்.
  • பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமானது.
புதன் வக்ர பெயர்ச்சி: சிலருக்கு சூப்பர், சிலருக்கு சுமார், முழு ராசிபலன் இதோ title=

புதன் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் இதன் விளைவு: ஆகஸ்ட் 21 அன்று, புதன் கிரகம் கன்னி ராசியில் நுழைந்து, அன்றிலிருந்து இந்த ராசியில் அமர்ந்திருக்கிறது. செப்டம்பர் 10 ஆம் தேதி, புதன் கிரகம் கன்னியில் வக்ரமாகவுள்ளது, அதாவது பிற்போக்கு இயக்கத்தை துவங்கவுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி, புதன் மீண்டும் மார்கி, அதாவது நேரான இயக்கத்துக்கும் வரும். கன்னி ராசியில் புதன் வக்ரமாகும்போது, ​​சில ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் மாறும்போதோ அல்லது வக்ரமாகும்போதோ, அது அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

புதன் கிரகம் அக்டோபர் 2 ஆம் தேதி இயல்பு நிலைக்கு திரும்பி, அக்டோபர் 26 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைகிறது. இப்படி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஏற்படும் புதன் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். எனினும் இரண்டு ராசிக்காரர்களுக்கு இதில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதனின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். எதிரிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம் - இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் காணப்படும். பொருளாதார நிலை மேம்படும். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இந்த நேரம் சாதகமானது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுகு இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கும்.

மிதுனம் - இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் வசதிகள் பெருகும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் ஏற்றது.

கடகம் - இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். இந்த நேரத்தில் விவாதத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது.

மேலும் படிக்க | மகாளய பட்சம் 2022: முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்க செய்ய வேண்டியவை! 

சிம்மம் - தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். வலுவான பண ஆதாயம் இருக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி - புதன் தனது சொந்த ராசியில் வக்ரமாவதால், கன்னி ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் உருவம் மேம்படும். இதுமட்டுமின்றி மாணவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

துலாம் - இந்த ராசிக்காரர்களும் இந்தக் காலத்தில் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நீதிமன்றப் பணியில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

விருச்சிகம் - புதனின் பிற்போக்கு நிலை விருச்சிக ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இந்த காலத்தில் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் பெரும் லாபம் பெறலாம்.

தனுசு - பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வர்த்தகர்கள் முதலீடு செய்யலாம். முதலீடு செய்ய சரியான நேரம் இது.

மகரம் - புதனின் வக்ர நகர்வால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்த நேரத்தில், மக்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். அவர்கள் தங்கள் தொழிலில் வெற்றியைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம் - இந்த நேரம் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.இந்த காலகட்டத்தில் யாருடனும் பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம். மாணவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

மீனம் - கூட்டாண்மையுடன் தொடர்புடைய மீன ராசி வணிகர்கள் இந்த காலகட்டத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.இந்த நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | சனியின் இயக்கத்தால் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்: லாபம் பெருகும், மகிழ்ச்சி பொங்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News