உதயமாகும் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், லாபம்

Mars Rise: செவ்வாயின் உதயம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 13, 2024, 01:44 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உதயம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • இந்த நேரத்தில் நீங்கள் தைரியம், வலிமை, தன்னம்பிக்கை மற்றும் அதிக ஆற்றல் ஆகியவற்றை அனுபவிப்பீர்கள்.
  • உங்கள் தொழில் தொடர்பான பல முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
உதயமாகும் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், லாபம் title=

செவ்வாய் பெயர்ச்சி: ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகத்திற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. செவ்வாய் கிரகம் நிலம், தைரியம், வீரம், துணிச்சல், ஆற்றல்  ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். செவ்வாய் தனது போக்கை மாற்றும் போதெல்லாம், மனித வாழ்க்கையிலும் பூமியிலும் பெரிய தாக்கம் காணப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு முக்கிய இடம் உண்டு. ஜோதிடத்தில், செவ்வாய் ஒரு ஆற்றல்மிக்க மற்றும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். ஜனவரி 16, 2024 அன்று செவ்வாய் தனுசு ராசியில் உதயமாவார். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும், இயக்க மாற்றங்களும், உதய, அஸ்தமன நிலைகளும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதே போல, செவ்வாயின் உதயமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு உடல் நலம் மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம். 

செவ்வாய் உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள்

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உதயம் (Mangal Uday) அதிகப்படியான சுப பலன்களைத் தரப்போகிறது. அதன் செல்வாக்கால் உங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் எதிரிகள் மீது வெற்றி காண இது சரியான நேரம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உங்கள் உறவு மிகவும் வலுவாக இருக்கும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்ல காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாயின் உதயம் உங்களுக்கு அதிக நற்பலன்களை அளிக்கும்.  தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும். இறக்குமதி-ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு நல்ல பொருளாதார லாபம் கிடைக்கும். மனதளவில் பலம் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | 30 ஆண்டுக்குப் பின் சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு பண மழை, பொற்காலம்

சிம்மம் (Leo)

செவ்வாய் உதயத்தின் போது, ​​உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் உறவுகள் வலுவடையும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் சில பெரிய பொறுப்புகள் கிடைக்கலாம். உங்கள் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவுகள் மேம்படும். செல்வம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் உதயம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் தைரியம், வலிமை, தன்னம்பிக்கை மற்றும் அதிக ஆற்றல் ஆகியவற்றை அனுபவிப்பீர்கள். இந்த நேரத்தில், உங்கள் தொழில் தொடர்பான பல முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். காதல் உறவில் இருப்பவர்களது காதல் நிறைவேறும் காலம் இது. இந்த ராசிக்காரர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வருமானத்தை அதிகரிக்க பல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் காலம்.... மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News