சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது லட்சுமி அருள்.... பண வரவு, வெற்றி, மகிழ்ச்சி

Sukran Peyarchi Palangal: அனைத்து ராசிகளிலும் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு மிக நல்ல பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் உச்ச ராசியான மீனத்தில் சஞ்சரிக்கும் போது எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2024, 05:10 PM IST
  • துலா ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம் உருவாகிறது.
  • இந்த நேரத்தில் எதிர்பாராத பல நல்ல செய்திகள் கிடைக்கும்.
  • பண வரவு அதிகமாகும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது லட்சுமி அருள்.... பண வரவு, வெற்றி, மகிழ்ச்சி title=

Sukran Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி ஆகும்போது, அந்த கிரகங்கள் தொடர்பான அம்சங்களில் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கங்கள் ஏற்படும்.

அசுரர்களின் குருவான சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியை மாற்றுகிறார். சமீபத்தில் மார்ச் 31 அன்று சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார். அவர் 23 ஏப்ரல் 2024 வரை இந்த ராசியில் இருப்பார். சுக்கிரன் தான் உச்சம் பெற்றுள்ள ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளது சுபமாக பார்க்கப்படுகின்றது. இதனால் பல ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். இதனுடன், மீனத்தில் ராகுவுடன் சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிரன் தனது உச்ச ராசியில் சஞ்சரிப்பதால் மூன்று வகையான ராஜயோகம் உருவாகின்றன. 

மீனத்தில் சஞ்சரிப்பதன் மூலம், சுக்கிரன் சில ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகத்தையும், சிலருக்கு விபரீத ராஜயோகத்தையும் சிலருக்கு மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். சுக்கிரன் ஒரே நேரத்தில் பல ராஜயோகங்களை உருவாக்குவதால், சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும். அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு மிக நல்ல பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் உச்ச ராசியான மீனத்தில் சஞ்சரிக்கும் போது எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதை இங்கே காணலாம்.

சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு சுப யோகம்:

துலாம் (Libra):

துலா ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் எதிர்பாராத பல நல்ல செய்திகள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இந்த ராஜயோகம் காரணமாக அற்புதமான நற்பலன்களை பெறுவீர்கள். வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை நீங்கள் காணக்கூடும். இதனால் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். வெற்றிகள் அதிகமாகும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இது தவிர சுக்கிரனும் ராகுவும் இணைவதால் பண லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். 

மேலும் படிக்க | 50 வருடங்களுக்கு பிறகு சதுர்கிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் அதிகரிக்கும்

தனுசு (Sagittarius): 

ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த ராசியில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இந்த காலத்தில் பணப் பற்றாக்குறை இருக்காது. பண வரவு அதிகமாகும். நிதி நிலையில் பன்மடங்கு முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறக்கூடும். இதனுடன், தொழில், குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணையின் மீதான உங்கள் பற்றுதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். மாடலிங், டிவி, திரைப்படம், வீடியோகிராபி, புகைப்படம் எடுத்தல் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான வெற்றியுடன் நிதி ஆதாயமும் கிடைக்கும். மாளவ்ய ராஜயோகம் அமைவதால் வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த காலத்தில் சௌகரியங்களும் ஆடம்பரங்களும் கூடும்.

மகரம் (Capricorn):

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுக்கிரன் உச்ச ராசிக்கு வருவதால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. ஆகையால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு  உங்களுக்கு முழுமையாக இருக்கும். அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முடங்கிய பணிகள் மீண்டும் தொடங்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மாணவர்களின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். மாணவர்கள் அனைத்து துறைகளிலும் பலன் பெறுவார்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. பாதிப்பு ஏற்படுத்துமா? ஜோதிடம் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News