நிதியாண்டின் முதல் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? 4 ராசிகளுக்கு சூப்பர்! 3 ராசிகளுக்கு சுமார்!

Weekly Rasipalan For April 1-7: ராசிபலன்களைத் தெரிந்துக் கொண்டு வாழ்க்கையைத் திட்டமிடுவது வழக்கமாகிவிட்டது. ஒரு வாரத்திற்கான ராசிபலன்களை தெரிந்துக் கொண்டு இயங்கினால் வாரம் நல்ல வாரமாகத் தொடங்கும்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 29, 2024, 05:31 PM IST
  • வார ராசிபலன்கள்!
  • திங்கள் முதல் வெள்ளி வரை ராசிபலன்கள்
நிதியாண்டின் முதல் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? 4 ராசிகளுக்கு சூப்பர்! 3 ராசிகளுக்கு சுமார்! title=

Weekly Horoscope : அடுத்த வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட உதவும் வார ராசிபலன்கள். இது, 12 ராசிகளுக்குமான ஒரு வாரத்திற்கான ராசிபலன்... ஏப்ரல் 1 முதல் 7 வரையிலான வார ராசிபலன் இது..

மேஷம்: விவேகமான செயல்பாடுகளின் மூலம் நல்ல பெயரைப் பெறலாம். ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளலாம். எழுத்துத் துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். கவனத்துடன் செயல்பட்டால் வாழ்க்கை மேம்படும்

ரிஷபம்
தந்தை வழி சொந்தங்களுடன் நெருக்கம் ஏற்பட்டாலும், வேண்டும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு நடந்தால் பணியிடத்திலும் நிம்மதியாக பணிபுரியலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதியாண்டின் முதல் வாரம் லாபமானதாக இருக்கும்.

மிதுனம்
வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள், தொழிலில் உள்ள நெருக்கடிகளை புரிந்து கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். வீடு மாற்றலாமா என்பது தொடர்பான சிந்தனைகள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும்

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: எந்த எந்த ராசிகளுக்கு இன்று நல்ல நேரம்?

கடகம்
காரியத்தடைகள் விலகும் என்றாலும், தொழில் அபிவிருத்தி சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது அவசியம். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க வேண்டாம். ஆனால், மகிழ்ச்சியான சூழ்நிலையால், மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியும் உத்வேகமும் பிறக்கும்.    

சிம்மம்
சில பிரச்சனைகள் விலகும் என்றாலும், மனதில் கவலைகள் விலகாது. கல்வி தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும், கடன் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தலாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறைவதால் கவலைகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | எல்லா திசைகளில் இருந்தும் பணம் மழையாய் பொழிய வந்துவிட்டது உபயாச்சாரி ராஜயோகம்!

கன்னி 
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால், வேலையிடத்தில் இருந்து வந்த பதற்றங்கள் குறையும்.  தொழில்ரீதியிலான கருத்து வேறுபாடுகள் விலகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகள் குறையும். 

துலாம் 
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பதும், பணம் பொருள் சொத்து தொடர்பான தடைகளும் கவலைகளும் அகலும் என்பதும் நல்ல காலம் தொடங்கியதற்கான அறிகுறியாக இருக்கும். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை புரிந்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். 

விருச்சிகம் 
உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை ஏற்படும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொண்டு, பணிபுரியும் இடத்தில் கிடைக்கும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனமாக இருக்கும். 

மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் இடம் மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்!

தனுசு 
நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணவரவு குறைவதால் கவலைகள் உண்டாக்கும். வேலையாட்கள் உங்கள் பேச்சை கேட்காமல் நடப்பது கோபத்தை உருவாக்கும், ஆனால் அவர்களிடம் அனுசரித்துச் செல்வது தான் நல்லது.

மகரம் 
தொழில் செய்பவர்களுக்கு கவனம் தேவை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இணக்கமாக செல்வது குடும்பத்திற்கு நல்லது. இனம்புரியாத கவலைகள் உண்டாகும். பதற்றமின்றி பொறுமையுடன் செயல்பட்டால் நல்லது நடக்கும்.

கும்பம் 

ஏப்ரல் மாத முதல் வாரம், நல்ல வாரமாக இருக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அனுபவ அறிவை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். உடன் இருப்பவர்களிடம் உரிமையுடன் நடந்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும்.

மீனம்
பயணங்களால் புதிய அனுபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகளில் நல்ல முடிவு ஏற்படலாம். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சில அனுபவங்களால் புதிய சிந்தனை தோன்றும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வக்ரமடையும் புதன்... இந்த ராசிகளுக்கு பணவிரயம்... பலன்களும் பரிகாரங்களும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News