ராசிபலன்: ஏப்.19ஆம் தேதியான இன்று யாருக்கெல்லாம் நல்ல நாள்...!

Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு ஏப். 19ஆம் தேதியான இன்றைய கிரகநிலைகளை பொருத்து பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 19, 2024, 08:00 AM IST
  • சில ராசிக்காரர்களுக்கு இன்று ஸ்பெஷலான நாளாகும்.
  • சில ராசிகளுக்கு வீட்டிலும், வெளியிலும் இருக்கும் சூழல் ரம்மியமாக இருக்கும்.
  • சில ராசிகளுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும்.
ராசிபலன்: ஏப்.19ஆம் தேதியான இன்று யாருக்கெல்லாம் நல்ல நாள்...! title=

Daily Horoscope In Tamil: ஏப். 19ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய நாளை தொடங்கும் முன் உங்கள் ராசிக்கான பலன்களை தெரிந்துகொண்டு தொடங்கும்போது ஒரு நேர்மறையான எண்ணம் உங்கள் நாளை சிறப்பாக்கும். அந்த வகையில், இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் இன்றைய ராசிபலன்களை இதில் காணலாம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு ஒரு சாதாரண நாளாகும். அதிக லாபம் தேடினால், நீங்கள் சிறிய வாய்ப்புகளையும் தவறவிடுவீர்கள் என்பதை நினைவில்கொள்ளவும். இதன்மூலம், உங்களின் மொத்த லாபம் குறைவாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு, இன்று மோசமான நாளாக இருக்கும். சில துக்கரமான செய்திகள் வந்தடையலாம். இதனால் திடீரென்று வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களில் பணி சார்ந்த ஊழியர்கள் இன்று பாராட்டப்படுவார்கள். இன்று பெரிதாக உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்காது. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலாவிற்கு திட்டமிட்டால், அது நிறைவேறும். 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஸ்பெஷலான நாளாகும். இருப்பினும், இன்று முடிக்காமல் வைத்திருக்கும் வேலைகளை விரைந்து முடிக்கவும். இன்று மாலை விருந்தினர்கள் உங்கள் வீட்டிற்கு வரலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று உங்கள் வீட்டிலும், வெளியிலும் இருக்கும் சூழல் ரம்மியமாக இருக்கும். இதனால் மகிழ்ச்சியடைவீர்கள். இன்று நீங்கள் ஷாப்பிங் செல்லலாம். குறிப்பாக இன்று பயனுள்ள நாளாக இருக்கும்.

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் நேரம் சரியில்லை!!

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நிலை சார்ந்து சில பிரச்னை வரும். நீண்ட நாளாக இருக்கும் நோய்கள் சில மீண்டும் வரலாம். அதன் காரணமாக இன்று உங்களுக்கு சுணக்கம் ஏற்படும். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நீங்கள் ஏதேனும் பெரிய தொழில் செய்ய விருப்பப்பட்டால், அதில் உங்கள் உறவினர்கள் யாரையும் பார்ட்னராக சேர்க்காதீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களான நீங்கள் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டும் என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணப் பரிவர்த்தனை செய்வதற்கு முன் நீங்கள் கவனமாக இருங்கள். அவசரமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள்

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பணம் பெருகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தை நம்பி எந்த ஒரு வேலையும் செய்தால் அதில் வெற்றி கிடைக்கும் எனலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும். சில வாய்ப்புகள் உங்களை தேடி உங்கள் வழியில் வந்தால், நீங்கள் விரும்பாவிட்டாலும் அதனை ஏற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களான நீங்கள் மாலையில் உங்களின் எந்த வேலையையும் முடிக்காமல் இருப்பீர்கள். எனவே, இது உங்களுக்கு கவலையளிக்கலாம். இன்று உங்கள் மரியாதை அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். சமய காரியங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். உங்களுக்கு ஏதேனும் சட்ட தகராறு இருந்தால், உங்கள் விருப்பப்படி பலன்களைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ஏப்ரல் 23 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம்! ஜாக்கிரதை!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News