புதன் பெயர்ச்சியால் நாளை முதல் பண மழையில் நனையப் போகும் ’4’ ராசி ராசிக்காரர்கள்

Mercury Transit December 3: புதனின் பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் சில ராசிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான மாதமாக இருக்கப்போகிறது. டிசம்பர் முழுவதும் அமோகமான பலன்களை அனுபவித்து, புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கவிருக்கும் ராசிகள் இவை... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 2, 2022, 06:51 AM IST
  • புதன் பெயர்ச்சியால் டிசம்பர் 3 முதல் பண மழையில் நனையும் ராசிகள்
  • கடகத்திற்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்
  • மகரத்திற்கு சேமிப்பு அதிகரிக்கும்
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் பண மழையில் நனையப் போகும் ’4’ ராசி ராசிக்காரர்கள் title=

புதன் பெயர்ச்சி 2022 டிசம்பர் 3: செல்வம், புத்திசாலித்தனம், வணிகம், தகவல் தொடர்பு, பேச்சுத்திறன் ஆகியவற்றுக்கு அதிபதியான புதன் கிரகம் டிசம்பர் 3, 2022 அன்று பெயர்ச்சியாக உள்ளது. அன்றைய தினத்தில், தேவகுரு வியாழனுக்கு சொந்தமான தனுசு ராசியில் புதன் நுழைவார். இந்த ராசிக்காரர்களின் பொன்னான நாட்கள் 24 மணி நேரத்தில் தொடங்கும், பண வரவும் வெற்றியும் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நாளை அதாவது டிசம்பர் 3, 2022 அன்று புதன் தனுசு ராசியில் பிரவேசித்த சில நாட்களுக்குப் பிறகு சூரியனும் அதே ராசியில் நுழைந்து புதாதித்ய யோகத்தை ஏற்படுத்துவார்.

2022 டிசம்பர் 29 வரை புதன் தனுசு ராசியில் இருக்கும். இதன் போது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தருவார். புதன் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம். புதன் சஞ்சாரம் இவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்

மேலும் படிக்க | டிசம்பரில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள், கேட்டது கிடைக்கும்

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பலன்களைத் தரும். பண வரவு சாதகமாக இருக்கும். எதிர்பாராத பணம் கிடைக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உறவுகள் வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சு சக்தியில் வேலை நடக்கும். அரசுத் துறையில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு பெரிய வெற்றியை கொடுக்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். பண வரவு சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் மகிழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்து வேலை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க | விருச்சிகத்தில் 'சதுர்கிரஹி யோகம்'; பண மழையில் நனையும் ‘3’ ராசிகள்!

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் பெரும் பலன்களைத் தரும். பெரும் பண ஆதாயம் உண்டாகும். நிதி நிலையில் ஏற்றம் இருக்கும், பணத்தை சேமிக்க முடியும். எதிர்பாராத பணம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். நல்ல தகவல் கிடைக்கலாம். பேச்சு சக்தியில் வேலை நடக்கும். மரியாதை அதிகரிக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம்: டிசம்பர் மாத தொடக்கத்திலேயே புதன் சஞ்சாரம் நடைபெறுவது மகர ராசிக்காரர்களுக்கு பல வகையில் பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான விஷயம் உங்களுக்கு சாதகமாக அமையும். செயல்களில் வெற்றி உண்டாகும். காதல் உறவுகள் வலுவாக இருக்கும். அரசுத்த்ரப்பில் இருந்து உதவிகள் கிடைக்கும். சில வேலைகள் முடிந்தவுடன் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 21 நாட்களில் உங்கள் தலைவிதியை மாற்ற தனது ராசியை மாற்றும் புதனின் சஞ்சாரம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News