மீனத்தில் சுக்கிரன்: இந்த ராசிகள் மீது லட்சுமி கடாஷம்... பண மழையில் நனைவார்கள்

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகியுள்ள 3 ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலனன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 10, 2024, 01:23 PM IST
  • சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்படும் மாளவ்ய ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்வில் இன்பம் அதிகரிக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இது நல்ல காலமாக அமையும்.
மீனத்தில் சுக்கிரன்: இந்த ராசிகள் மீது லட்சுமி கடாஷம்... பண மழையில் நனைவார்கள் title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் நலல் பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.

செல்வம், சொத்து, செழிப்பு, புகழ், அழகு, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் மார்ச் 31 அன்று தனது உச்ச ராசியான மீனத்தில் பெயர்ச்சி ஆனார். ஏப்ரல் 23 வரை அவர் அந்த ராசியிலேயே இருப்பார். தான் உச்சம் பெற்றுள்ள மீனத்தில் பெயர்ச்சியாகியுள்ள சுக்கிரன் பிற ராசிகளுடன் சேர்ந்து 3 பெரிய ராஜயோகங்களை உருவாக்குகிறார். 

சுக்கிரன் தனது உச்ச ராசியில் பிரவேசித்துள்ளதால் மாளவ்ய ராஜயோகத்தை உருவாகியுள்ளது. இது தவிர, மீனத்தில் ராகுவும், சுக்கிரனும் இணைந்ததால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. ஏற்கனவே மீன ராசியில் ராகு இருப்பதால், 50 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு கிரகங்களும் சேர்ந்து இருப்பது இதுவே முதல்முறை என்பது சிறப்பு. இது தவிர, புதனும் மீனத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகியுள்ளார். இதனால் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. 

சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகியுள்ள 3 ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலனன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்களை பெறவுள்ள ராசிகள்

மீனம் (Pisces): 

மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி, ஒரே நேரத்தில் 3 ராஜயோகங்களை உருவாக்குகிறது. இது மீன ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும், புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இப்போது நேரம் நன்றாக இருக்கும். பணி இடத்தில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளை இனி அசைச்சுக்க முடியாது..!!

தனுசு (Sagittarius): 

சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்படும் மாளவ்ய ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்வில் இன்பம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இது நல்ல காலமாக அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க  வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். 

துலாம் (Libra): 

சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் விபரீத ராஜயோகம் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நிதி ஆதாயங்கள் உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பெரிய பதவிகளை பெறுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு குபேர யோகம்... அட்டகாசமான பண வரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News