குரு பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு அருள்.... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Guru Peyarchi: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். குரு அருளால் இவர்களது வாழ்வில் செல்வம் செழிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 12, 2024, 05:04 PM IST
  • கடக ராசிக்காரர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.
  • வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும்.
  • இந்த காலத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்க வாய்ப்புள்ளது.
குரு பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு அருள்.... வெற்றியின் உச்சம் தொடுவார்கள் title=

Guru Peyarchi: ஜோதிட கணக்கீடுகளின் படி குரு பகவான், 1 வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். கடந்த ஆண்டு குரு பெயர்ச்சியாகி மேஷ ராசிக்கு வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவர் மேஷ ராசியில் இருப்பார். மே 1, 2024 அன்று, மீண்டும் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. அவர் மேஷத்திலிருந்து விலகி ரிஷப ராசிக்கு செல்வார். குருவின் இந்த பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்கப்படுகின்றது. 

குரு பகவான் திருமண மகிழ்ச்சி, குழந்தைகள், நல்ல அதிர்ஷ்டம், அறிவு, கல்வி, பேச்சாற்றல், மரியாதை, நல்லொழுக்கம், ஆகியவற்றுக்கு  காரணியாக உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல இடத்தில் இருந்தால் அவர் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுகிறார். அவர் வெற்றியின் உச்சம் தொடுவதை யாராலும் தடுக்க முடியாது. குருவின் அருள் பெற்ற நபர்களுக்கு அறிவாற்றல் மேம்பட்டு, சமூகத்தில் நல்ல கௌரவத்தையும் அனுபவிப்பார்கள்.

குருவின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது செல்வம், தொழில், மகிழ்ச்சி, திருமண வாழ்க்கை போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். குரு அருளால் இவர்களது வாழ்வில் செல்வம் செழிக்கும். வெற்றிகள் இவர்களை தேடி வரும், அனைத்து வித பிரச்சனைகளும் சுமுகமாக முடியும். அந்த அதிர்ஷ்டக்கார ராசியகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

குரு பெயர்ச்சியால் வெற்றியின் உச்சம் தொடவுள்ள ராசிகள் 

மேஷம் (Aries): 

மேஷ ராசிக்காரர்கள் அடுத்த 4 மாதங்களில் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அற்புதமாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தொழில், வியாபாரத்திலும் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் வருமானத்திலும் நல்ல உயர்வு காணப்படும். இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் ஏற்படும். உங்கள் ஆசைகள் அனைத்தும் இந்த ஆண்டு நிறைவேறும். வெளிநாட்டில் இருந்து நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம் (Gemini)

குரு பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றம் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். மிதுன ராசிக்காரர்கள் 2024-ம் ஆண்டில் தாங்கள் நினைத்ததை சாதிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டில் தங்கள் கடின உழைப்பின் மூலம் இலக்கை அடைவதில் வெற்றி பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலை வலுவாக இருக்கும்.

கடகம் (Cancer): 

கடக ராசிக்காரர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். இந்த காலத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் தொழிலதிபர்கள் வெளிநாட்டில் இருந்து லாபம் அடைவார்கள். இது தவிர, உங்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | Pongal: பொங்கல் கொண்டாட இப்படி ஒரு காரணமா? சங்கராசுரன் வதம்! சங்கராந்தி நம்பிக்கை

சிம்மம்  (Leo): 

கடந்த சில மாதங்களாக இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறத் தொடங்குவீர்கள். நன்கு யோசித்து செயல்படுத்திய திட்டங்கள் நல்ல பலன்களைத் தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பல வழிகளில் பணம் பெறுவீர்கள். இந்த மாற்றத்தின் சுப பலன் காரணமாக, முன்பை விட பணம் சம்பாதிக்கும் திறன் அதிகமாக இருக்கும். குரு பெயர்ச்சியின் பலனாக சிம்ம ராசிக்காரர்கள் 2024-ம் ஆண்டு அனைத்து வசதிகளையும் அனுபவிப்பார்கள்.

மேலும் படிக்க | பொங்கல் ராசிபலன்: தை முதல் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், வெற்றி...அனைத்தும் பொங்கும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News