செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் நேரம் சரியில்லை!!

Sevvai Peyarchi Palangal: மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 18, 2024, 05:51 PM IST
  • செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கு சவாலான பல சந்தர்ப்பங்களை கொண்டு வரும்.
  • தேவையில்லாமல் பயணம் செய்ய நேரிடலாம்.
  • உங்கள் தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது.
செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம், ஏமாற்றம்... மொத்தத்தில் நேரம் சரியில்லை!! title=

Sevvai Peyarchi Palangal: கிரக பெயர்ச்சிகள் ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகின்றன. அனைத்து கிரகங்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் வீடு, மனை, ஆற்றல், நிலம், அறிவு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். செவ்வாய் ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கும்பத்தில் இருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் செவ்வாய் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும். சில ராசிகள் இந்த காலத்தில் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவர்கள் பல வித பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். செவ்வாய் பெயர்ச்சியால் இன்னல்களை சந்திக்கவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries)

மேஷ ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி அத்தனை சாதமகாக இருக்காது. இவர்களின் செலவுகள் அதிகரிக்கும். பணத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இந்த காலத்தில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். எதிரிகளால் பிரச்சனை ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். வீட்டில் உடன்பிறந்தவர் அல்லது நெருங்கிய நண்பருடன் தகராறு ஏற்படலாம். உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்துவது நல்லது. 

கடகம் (Cancer)

செவ்வாய்ப் பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களின் அலைச்சல் அதிகரிக்கும். பிறரிடம் பேசும்போது அதிகப்படியான கவனத்துடன் இருக்க வேண்டும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதைக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். இதனால் மனம் சற்று அமைதி காணலாம். 

சிம்மம் (Leo)

செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கு சவாலான பல சந்தர்ப்பங்களை கொண்டு வரும். செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாமல் பயணம் செய்ய நேரிடலாம். உங்கள் தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. மனம் சஞலம் அடையும். மன அழுத்தம் அதிகமாகும். இந்த காலத்தில் முக்கியமான முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். சொந்தங்களுடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். 

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் பல ஏமாற்றங்கள் கிடைக்கலாம். முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படும். பண விரயம் இருக்கும். உடல் நல பாதிப்புகள் வரக்கூடும். தொழிலில் தேக்கநிலையை சந்திப்பீர்கள். இந்த நேரத்தில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. பிறரிடம் பேசும்போது நிதானம் தேவை. தேவையில்லாமல் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். 

மீனம் (Pisces)

செவ்வாய் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு பல வித தர்மசங்கடங்களை ஏற்படுத்தலாம். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை அல்லது வணிகத் துணையுடன் உறவு மோசமடையலாம். கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்க திட்டமிட்டால் அதில் கவனமாக செயல்படவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News