மூன்று கிரகங்களின் மகாசங்கமம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள்

Trigrahi Yogam: திரிகிரஹி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2023, 11:01 AM IST
  • ஜோதிட சாஸ்திரப்படி மீனத்தில் திரிகிரஹி யோகம் உருவாகிறது.
  • இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிக அதிக பலன்களை அளிக்கப் போகிறது.
  • மீன ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும்.
மூன்று கிரகங்களின் மகாசங்கமம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள் title=

மீனத்தில் திரிகிரஹி யோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் அதன் நிலையை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து 12 ராசி அறிகுறிகளின் வாழ்விலும் தெளிவாகத் தெரியும். அதே சமயம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையும் பல சுப யோகங்களை உருவாகின்றன. மார்ச் 15 அன்று சூரியன் மீன ராசியில் பிரவேசித்தார். புதனும் குருவும் ஏற்கனவே மீன ராசியில் உள்ளனர். 

மீனத்தில், சுரியன், புதன் மற்றும் குரு ஆகிய மூன்று பெரிய கிரகங்களின் சேர்க்கை ஒரு மிக அரிய மற்றும் முக்கியமான நிகழ்வாகும். இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால், சக்தி வாய்ந்த திரிகிரஹி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மீனம்

ஜோதிட சாஸ்திரப்படி மீனத்தில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிக அதிக பலன்களை அளிக்கப் போகிறது. இந்த ராசியின் லக்ன வீட்டில் இந்த யோகம் உருவாகப் போகிறது. இதன் மூலம் மீன ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். 

இதனுடன், உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த யோகத்தின் பார்வை உங்கள் ஜாதகத்தின் ஏழாம் வீட்டின் மீது படப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கூட்டு வேலை செய்ய நினைத்தால், அது நன்மை பயக்கும். விரைவில் நீங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி நடக்கும்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இது குழந்தைகளின் வீடு, முன்னேற்றம், அன்பு, உறவு போன்றவற்றுக்கான ஸ்தானமாகும். அத்தகைய சூழ்நிலையில், எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். ஆன்மிகம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் தொடர்புடையவர்களும் வெற்றி பெறலாம். கல்வியில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு

மீனத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு பலன் தரும். உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் நான்காம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இது உலக இன்பம் மற்றும் தாயின் ஸ்தானமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் செல்வச்செழிப்பு, உலக இன்பத்தால் வரும் சுகங்களைப் பெறுவார்கள். வாகன சுகமும் கிட்டும். இந்த நேரத்தில் புதிய சொத்து வாங்குவது போன்றவற்றையும் யோசிக்கலாம். இப்போது செய்யப்படும் முதலீட்டால் எதிர் காலத்தில் நல்ல லாபம் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சரஸ்வதி அருளால் கல்வியில் ஜொலிக்கப்போகும் 2 ராசிகள்..! அரசுப் பணி காத்திருக்கிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News